மீண்டும் உயர்ந்தது தங்க விலை..!

 

மீண்டும் உயர்ந்தது தங்க விலை..!

கடந்த மாதம் தங்க விலை 30 ஆயிரத்தை எட்டியது போல் இந்த மாதமும் மீண்டும் நிகழ்ந்து விடுமோ என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

தங்க இறக்குமதி காரணமாகத் தங்க விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த மாதம் துவக்கம் முதல் தங்க விலை சுமார் ரூ.500 உயர்ந்துள்ளது. கடந்த மாதம் தங்க விலை 30 ஆயிரத்தை எட்டியது போல் இந்த மாதமும் மீண்டும் நிகழ்ந்து விடுமோ என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

Gold

இந்த மாதம் 3 ஆம் தேதி தங்க விலை 29 ஆயிரத்தை எட்டிய நிலையிலிருந்து ஒரு நாள் கூட தங்க விலையில் வீழ்ச்சி ஏற்படவில்லை. இன்றைய நிலவரத்தின் படி தங்க விலை கிராமுக்கு ரூ.7 உயர்ந்து ரூ.3,665க்கு விற்கப் படுகிறது. அதன் படி, சவரனுக்கு ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.29,320க்கு விற்கப் படுகிறது. 

மேலும், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைக்கு விற்கப்பட்ட அதே விலையில் விற்கப் படுகிறது. அதாவது, ஒரு கிராம் வெள்ளி ரூ.49.90க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.49,900க்கும் விற்கப்படுகிறது.