மீண்டும் உச்சத்தை நோக்கிச் செல்லும் தங்க விலை..!

 

மீண்டும் உச்சத்தை நோக்கிச் செல்லும் தங்க விலை..!

செப்டம்பர் 3 ஆம் தேதி 29 ஆயிரத்தை எட்டிய தங்க விலை, கடந்த 9 நாட்களாகக் கிட்டத் தட்ட  500 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

தங்க விலை கடந்த மாத துவக்கத்தில் 30 ஆயிரத்தை எட்டியது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதன் பிறகு குறைந்த தங்க விலை கடந்த மாதம் இறுதியில் 28 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. இந்த மாதம் துவங்கி 9 நாட்களில் ஒரு நாள் மட்டுமே தங்க விலை குறைந்துள்ளது.

Gold

செப்டம்பர் 3 ஆம் தேதி 29 ஆயிரத்தை எட்டிய தங்க விலை, கடந்த 9 நாட்களாகக் கிட்டத் தட்ட  500 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.17 குறைந்து ரூ.3,665க்கு விற்கப் படுகிறது. அதன் படி ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.29,320க்கு விற்கப்படுகிறது. தொடர்ச்சியாக ஏறி வரும் தங்க விலை மீண்டும் 30 ஆயிரத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 80 காசுகள் உயர்ந்து ரூ.49.80க்கு விற்கப் படுகிறது. அதன் படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.800 உயர்ந்து ரூ.49,800க்கு விற்கப் படுகிறது.