‘மீண்டும் உச்சத்தில் கொரோனா பாதிப்பு’ : ஷாக் கொடுக்கும் ரிப்போர்ட்!

 

‘மீண்டும் உச்சத்தில் கொரோனா பாதிப்பு’ : ஷாக் கொடுக்கும் ரிப்போர்ட்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 39 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் தலைதூக்கியிருக்கிறது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு நாளொன்றின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் குறைவாகவே இருந்தது. ஆனால், தற்போது பாதிப்பு கிட்டத்தட்ட 4 மடங்கு அதிகரித்திருக்கிறது. கொரோனா இரண்டாம் கட்ட அலை வீசத் தொடங்கியிருப்பதாக ஐ.நா எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இதனால், மாநில அரசுகள் மீண்டும் லாக்டவுன், மாஸ்க் அபராதம் உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை கையிலெடுத்துள்ளன.

‘மீண்டும் உச்சத்தில் கொரோனா பாதிப்பு’ : ஷாக் கொடுக்கும் ரிப்போர்ட்!

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 39,726 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், ஒரே நாளில் கொரோனாவுக்கு 154 பேர் உயரிழந்திருப்பதாகவும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவோர் எண்ணிக்கை 20,654 ஆக குறைந்திருப்பதாகவும் சிகிச்சை பெறுவோர் 2,71,282 ஆக உயர்ந்திருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘மீண்டும் உச்சத்தில் கொரோனா பாதிப்பு’ : ஷாக் கொடுக்கும் ரிப்போர்ட்!

மேலும், மொத்த கொரோனா பாதிப்பு 1,15,14,331 ஆக உயர்ந்துள்ளதாகவும் மொத்த உயிரிழப்புகள் 1,59,370 ஆக அதிகரித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மீண்டும் லாக் டவுன் அமல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கசிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.