மீண்டும் இரு கிராமங்களாகப் பிரிந்த பிக் பாஸ் வீடு!

 

மீண்டும் இரு கிராமங்களாகப் பிரிந்த பிக் பாஸ் வீடு!

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 3 தொடங்கி 64 நாட்களை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதிலிருந்து இதுவரை பாத்திமா பாபு,வனிதா, மோகன் வைத்யா, மீரா, சாக்ஷி, அபிராமி, சரவணன்,மதுமிதா மற்றும் கஸ்தூரி ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

இந்த வாரம் நோ எலிமினேஷன் என்று தெரியாமல் ஹவுஸ் மேட்ஸ் வழக்கம் போல் நாமினேட் செய்தனர். அந்த வகையில் இந்த லிஸ்டில் வனிதா, முகின், ஷெரின் மற்றும் கவின் ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர்.

இந்த நிலையில் இன்றைக்கான புரோமோ வெளியாகியுள்ளது. அதில் இந்த பிக் பாஸ் விடு இரு கிராமங்களாக மாறுவது போல் உள்ளது. எப்போதும் போல் லாஸ்லியா- கவின் காதல் விளையாட்டு அதிலும் உள்ளது. அப்போது நாம் கலாச்சாரத்தை மறந்த வாழ்வதால் அதை கற்று தர ஒரு புதிய நபர் உள்ளே சென்றுள்ளார். அவர் கற்றுத்தருவதைப் போட்டியாளர்கள் உற்சாகத்துடன் கற்றுக்கொண்டது போல் புரோமோ முடிக்கப்பட்டுள்ளது.