மீண்டும் இரண்டு நாட்களுக்கு வாக்காளர் சிறப்பு முகாம்…தேர்தல் ஆணையம் அறிவிப்பு !

 

மீண்டும் இரண்டு நாட்களுக்கு வாக்காளர் சிறப்பு முகாம்…தேர்தல் ஆணையம் அறிவிப்பு !

தமிழகம் முழுவதும் 67,687 ஓட்டுச்சாவடிகளில் சிறப்பு முகாம்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்து, அதன் முடிவுகளும்  வெளியிடப்பட்டன. விரைவில் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், கடந்த 4 மற்றும் 5 ஆம் தேதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் மேற்கொள்வதற்காகச் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 67,687 ஓட்டுச்சாவடிகளில் சிறப்பு முகாம்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

ttn

சிறப்பு முகாம்கள் விடுமுறையன்று நடத்தப்பட்டதால், சுமார் 9 லட்சம் பேர் அதன் மூலம் பயனடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளதால் திமுக மற்றும் அதிமுக கட்சியினர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். 

ttn

இந்நிலையில், வரும் 11 மற்றும் 12 ஆம் தேதி மீண்டும் வாக்காளர்  சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளதாகத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். அதன் பின்னர், முகாம்களில் வழங்கப்பட்ட மனு பரிசீலிக்கப்பட்டு அடுத்த மாத இறுதியில் வாக்காளர் பட்டியலை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.