மீண்டும் இந்தியா பாகிஸ்தான் விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் டிரம்ப்

 

மீண்டும் இந்தியா பாகிஸ்தான் விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் டிரம்ப்

இருநாடுகளும் ஒப்புக்கொண்டால் இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து வைப்பேன்.

இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்து வரும் பிரச்னையை முடித்து வைக்க உதவுவதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370,35ஏ ரத்து செய்யப்பட்டதிலிருந்தே இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதனால் இந்தியா காஷ்மீர் எல்லையில் தினந்தோறும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இருநாட்டுக்கும் இடையே வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

 இம்ரான் கான் - டிரம்ப்

இந்நிலையில் ஐ.நா பொது சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்கா சென்றுள்ளார்.

அங்கு அதிபர் டிரம்பை சந்தித்த அவர் காஷ்மீர் பிரச்னை குறித்து மறுபடியும் வருத்தம் தெரிவித்துள்ளார். இதனை கேட்ட அதிபர் டிரம்ப், “இருநாடுகளும் ஒப்புக்கொண்டால் இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து வைப்பேன்” என்று தெரிவித்தார்.

பல முறை அமெரிக்க அதிபர் இந்த விவாகரம் குறித்து  சமரசம் செய்வப்பதாகக் கூறியிருந்தும் இந்தியா அதனை மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.