மீண்டும் இணையும் ‘விடிவி’ ஹிட் காம்போ!

 

மீண்டும் இணையும் ‘விடிவி’ ஹிட் காம்போ!

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் படத்துக்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவிருப்பதாக தெரிகிறது.

சென்னை: கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் படத்துக்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவிருப்பதாக தெரிகிறது.

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான காதல் திரைப்படமான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தை இன்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதைத் தொடர்ந்து இவர்களது காம்போவில் வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் காம்போவாக கருதப்படும் கவுதம் மேனந்சிம்பு-ஏ.ஆர்.ரகுமான் மேஜிக் காம்போ மீண்டும் இணையவுள்ளது. இந்த படம் புதிய கதையா அல்லது ‘விண்ணைத் தாண்டி வருவாயா 2’-வா என்பது குறித்து தெரியவில்லை.

கடந்த சில ஆண்டுகளாக தோல்வி படங்களை கொடுத்து வந்த சிம்பு, மணிரத்னத்தின் கூட்டணியில் ‘செக்கச்சிவந்த வானம்’ திரைப்படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை துவக்கினார். செக்கச்சிவந்த வானம் படத்தில் மாஸ் கிளப்பிய சிம்பு அடுத்தடுத்து பிரபல இயக்குநர்களுடன் கூட்டணி அமைத்து வருகிறார்.

தற்போது லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கி வரும் புதிய படத்தில் சிம்பு நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து வெங்கட் பிரபுவுடன் ‘மாநாடு’ படத்தில் நடிக்கவுள்ளார். இதை முடித்த பின் கவுதம் மேனனுடன் கூட்டணி அமைப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.