மீண்டும் இணைந்த ஹாட்ரிக் வெற்றி கூட்டணி!

 

மீண்டும் இணைந்த ஹாட்ரிக் வெற்றி கூட்டணி!

தளபதி விஜய் நடிக்கும் ‘தளபதி 63’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை: தளபதி விஜய் நடிக்கும் ‘தளபதி 63’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘தெறி’, ‘மெர்சல்’, படங்களை தொடர்ந்து 3வது முறையாக அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கவிருக்கிறார். ‘தளபதி 63’ என்று தர்காலிகமாக அழைக்கப்படும் இப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் இசையமைக்கிறார். ‘மெர்சல்’, ‘சர்கார்’ படத்தை தொடர்ந்து 3வதாக விஜய்-ரகுமான் கூட்டணியும் இணைந்துள்ளது.

இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிறுவனத்தின் 20வது திரைப்படமான ‘தளபதி 63’ திரைப்படம் இவர்கள் இதுவரை தயாரித்த திரைப்படங்களில் பிரம்மாண்டமான படமாகும். அதிக பொருட்செலவில் உருவாகவிருக்கும் இப்படத்தில் மெர்சல் பட தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றவுள்ளனர்.

‘தளபதி 63’ படத்தின் மற்ற நடிகர்கள் குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது