மீண்டும் இணைக்கிறது ராட்சசன் பட கூட்டணி?

 

மீண்டும் இணைக்கிறது ராட்சசன் பட கூட்டணி?

விஷ்ணு விஷாலுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிகை அமலா பால் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

மீண்டும் இணைக்கிறது ராட்சசன் பட கூட்டணி?

விஷ்ணு விஷாலுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிகை அமலா பால் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

விஷ்ணு விஷால்- அமலா பால் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான படம் ராட்சசன்.  சைக்கோ த்ரில்லர் படமான இதை ராம்குமார் இயக்கினார். அதைத்தொடர்ந்து தற்போது விஷ்ணு விஷால் நடிப்பில் காடன் திரைப்படம் தயாராகி வருகிறது. அதுமட்டுமின்றி அவர் மான்ஸ்டர் படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் தெலுங்கில் வெளியான ஜெர்ஸி படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ரானா டகுபதி பெற்றுள்ளார். கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகும் இதில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிகை அமலா பால் நடிக்கவுள்ளதாகக்  கூறப்படுகிறது. ஆனால், இதுபற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.  

முன்னதாக விஷ்ணு விஷால்- அமலா பால் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக கிசுகிசுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.