மீண்டும் அதிர்ச்சி கொடுத்த யெஸ் பேங்க்……… 3 மாசத்துல ரூ.18,564 கோடி நஷ்டம்…. உண்மையை வெளிப்படுத்திய 2019 டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவு….

 

மீண்டும் அதிர்ச்சி கொடுத்த யெஸ் பேங்க்……… 3 மாசத்துல ரூ.18,564 கோடி நஷ்டம்…. உண்மையை வெளிப்படுத்திய 2019 டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவு….

கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் யெஸ் பேங்க் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.18,564 கோடியை நஷ்டமாக சந்தித்துள்ளது.

நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றாக விளங்கிய யெஸ் பேங்க் கடந்த சில ஆண்டுகளாக தடுமாற்றத்தை சந்தித்து வந்தது. குறிப்பாக கடந்த சில மாதங்களாக அந்த வங்கியின் நிதி நிலவரம் மிகவும் சிக்கலான நிலையில் இருந்தது. இந்நிலையில் அண்மையில் ரிசர்வ் வங்கி யாரும் எதிர்பாராத வகையில் யெஸ் பேங்குக்கு தடை விதித்தது. மேலும், யெஸ் பேங்கின் இயக்குனர்கள் குழுவை கலைத்து அந்த வங்கியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

யெஸ் பேங்க்

யெஸ் பேங்க் தனது 2019 டிசம்பர் காலாண்டு முடிவுகளை நேற்று வெளியிட்டது. அந்த காலாண்டில் யெஸ் பேங்க் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.18,564 கோடியை இழப்பாக சந்தித்துள்ளது. 2019 செப்டம்பர் காலாண்டில் யெஸ் வங்கிக்கு ரூ.629 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருந்தது. அதேசமயம் 2018 டிசம்பர் காலாண்டில் அந்த வங்கிக்கு ரூ.1,000 கோடி லாபம் கிடைத்து இருந்தது.

யெஸ் பேங்க்

2019 டிசம்பர் காலாண்டில் யெஸ் பேங்கின் வாராக் கடன் ரூ.40,709 கோடியாக உயர்ந்தது. 2018 டிசம்பர் காலாண்டு இறுதியில் யெஸ் பேங்கின் வாராக் கடன் ரூ.5,158 கோடி என்ற அளவில்தான் இருந்தது. மொத்த வாராக் கடன் விகிதம் 2.10 சதவீதத்திலிருந்து 18.87 சதவீதமாக உயர்ந்துள்ளது. யெஸ் பேங்க் நிதி நிலவரம் எந்தவொரு மோசமான நிலையில் உள்ளது என்பதை இந்த 2019 டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகள் வெளிச்சம் போட்டு காட்டி விட்டது.