மீட்டிங்கா,கடைய சாத்து,பிஜேபியைக் கலங்கடிக்கும் கேரள வியாபாரிகள்

 

மீட்டிங்கா,கடைய சாத்து,பிஜேபியைக் கலங்கடிக்கும் கேரள வியாபாரிகள்

குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பிஜேபியினர் கேரளத்தில் நடத்தும் கூட்டங்களின் போது அந்தப்பகுதியில் உள்ள கடைகளை அடைத்துவிட்டு வீட்டுக்குப் போய்விடுகிறார்கள் கேரள வியாபாரிகள்.

குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பிஜேபியினர் கேரளத்தில் நடத்தும் கூட்டங்களின் போது அந்தப்பகுதியில் உள்ள கடைகளை அடைத்துவிட்டு வீட்டுக்குப் போய்விடுகிறார்கள் கேரள வியாபாரிகள்.

ஆட்டோ,டாக்சிகள்கூட அந்தப்பக்கம் போவதில்லை.இந்தப் புதுமையான போரட்டத்தை முதலில் ஆரம்பித்து வைத்தது,ஆலப்புழா மாவட்டத்தில் இருக்கும் அம்பலப்புழை என்கிற கோவில் நகரம்.மாலை 5.30 மணிக்கெல்லாம் அத்தனை வியாபாரிகளும் ஷட்டரை இழுத்து மூடி பூட்டிவிட்டு போய்விட்டார்கள்.நகரமே அரைமணி நேரத்தில் வெறிச்சோடிப் போய்விட்டதால் கூட்டத்தை ரத்து செய்து விட்டனர் பிஜேபியினர். 

shutters down

அடுத்து திங்களன்று கோழிகோடு மாவட்டம் குட்டியாடியில் பிஜேபி தலைவர் எம்.டி ரமேஷ் கலந்து கொள்ளும் குடியுரிமை ஆதரவு கூட்டம் அறிவிக்கப்பட்டது.அன்று பிற்பகல் 3.30க்கே கடைகளை மூடிபிட்டார்கள் குட்டியாடி வியாபாரிகள்.சாலைகளில் நடமாட்டமே இல்லை,நமத்துப்போன பட்டாசாகிவிட்டது அந்த கூட்டம்.அதே நாளில் பக்கத்து நகரமான நரிக்குன்னில் கேரள மாநில பிஜேபியின் துணை தலைவர் ஏ.பி அப்துல்லா குட்டி உரையாற்றுவதாக இருந்த கூட்டத்துக்கும் அதேகதி.800 கடைகள் இருந்த நரிக்குன்னில் ஏழெட்டு கடைகள் மட்டுமே திறந்திருந்தன.அவர்களும் கேரள மாநில வியாபாரி விவசாயி சங்கத்தின் ( வணிகர்கள் , உற்பத்தியாளர்கள் சங்கம்) பொறுப்பில் இருப்பவர்கள்.

அதனால் சங்கம் சொல்லாமல் எப்படி கடையை மூடுவது என்று வீம்பாகத் திறந்து வைத்து பார்த்து விட்டு,சாலைகளில் ஆள் நடமாட்டமே இல்லை என்றானதும் 5 மணிக்கு கடைகளை மூடிவிட்டுச் சென்று விட்டனர்.
இந்த செயல்பாடு பிஜேபியினர் ரத்த அழுத்தத்தை கூட்டுகிறது என்பதால்,இது பஞாப்,தமிழ்நாடு, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களிலும் படரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.