மீடூ விவகாரம்: சில பெண்களுடன் நானும் டேட்டிங் சென்றுள்ளேன்: நடிகர் விஷால் ஓபன் டாக்!

 

மீடூ விவகாரம்: சில பெண்களுடன் நானும் டேட்டிங் சென்றுள்ளேன்: நடிகர் விஷால் ஓபன் டாக்!

சில பெண்களுடன் தானும் டேட்டிங் சென்றுள்ளதாகவும், இருவரும் மனமொத்து பழகுவதற்கும், ஒருவரைத் தவறாக பயன்படுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது என்றும் விஷால் தெரிவித்துள்ளார்.

சென்னை: சில பெண்களுடன் தானும் டேட்டிங் சென்றுள்ளதாகவும், இருவரும் மனமொத்து பழகுவதற்கும், ஒருவரைத் தவறாக பயன்படுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது என்றும் விஷால் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில்  கடந்த சில மாதங்களாக மீடூ பிரச்சனை குறித்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘நடிகைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என எந்த திரைத்துறையாக இருந்தாலும் நடிகைகள் பயமின்றி பாதுகாப்புடன் பணிசெய்வதை உறுதி செய்ய வேண்டும். தன்னுடைய முதல் படத்தில் இருந்து ‘சண்டக்கோழி 2′ படத்தில் நடித்த இரண்டு நாயகிகள் வரை நடிகைகள் பாதுகாப்பாக பணி செய்தனர்’ என்று கூறியுள்ளார்.

 
‘மீடூ என்பது பெண்களிடம் தவறாக நடப்பவர்களை வெளிக்காட்டும் ஒரு அம்சம் என்றாலும் ஒரு சிலர் இதனைத் தவறாக பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். சில பெண்களுடன் தானும் டேட்டிங் சென்றுள்ளேன். இருவரும் மனமொத்து பழகுவதற்கும், ஒருவரைத் தவறாக பயன்படுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது. காலம் தாழ்ந்து குற்றச்சாட்டு கூறுதல், வாய்ப்பு தருவதாக உறுதியளித்துவிட்டு அது நடக்காமல் போனால் பழிவாங்குவதற்காக மீடூவை ஆயுதமாக எடுக்கும் நிலை மாற வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.