மிஸ் யூனிவெர்ஸ் 2019 யாருனு தெரியுமா? கருப்பாக இருப்பவர்களும் அழகிதாங்க! 

 

மிஸ் யூனிவெர்ஸ் 2019 யாருனு தெரியுமா? கருப்பாக இருப்பவர்களும் அழகிதாங்க! 

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் டிசம்பர் 8ஆம் தேதி நடைபெற்ற மிஸ் யூனிவெர்ஸ் 2019 டைட்டிலை தென்னாப்பிரிக்காவை சேர்ந்த சோசிபினி டன்சி தட்டி சென்றுள்ளார்.

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் டிசம்பர் 8ஆம் தேதி நடைபெற்ற மிஸ் யூனிவெர்ஸ் 2019 டைட்டிலை தென்னாப்பிரிக்காவை சேர்ந்த சோசிபினி டன்சி தட்டி சென்றுள்ளார். இவருக்கு, 2018யின் மிஸ் யூனிவெர்ஸ் காற்றியோனா கிரே (Katriona Gray) கிரீடத்தை சூட்டினார். இதன் மதிப்பு 5மில்லியன் டாலர் ஆகும். 26 வயதாகும் சோசிபினி மிகவும் மிடுக்காக காட்சியளித்தார். புவேர்ட்டோ ரிக்கோவைச் சேர்ந்த மேடிசன் ஆண்டர்சன் 2-வது இடத்தையும், மெக்ஸிகோவின் சோபியா அரகன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். இந்த போட்டியில் இந்தியாவை சேர்ண்ட்க வர்த்திகா சிங் என்பவரும் பங்கேற்றார். ஆனால் துரதிஷ்டமாக அவர் வெற்றிவாகையை சூடவில்லை. 

Miss universe

சோசிபினி, தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அளித்த தனித்துவம் வாய்ந்த சிறப்பான பதில்களால் நடுவர்களை கவர்ந்துவிட்டார். சோசோபினி பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிர்த்து போராடுபவர். இந்த போராட்டத்தில் ஈடுபடும் இவர் சவுத் ஆப்பிரிக்காவிலிருந்து அழகிப் பட்டத்தை வென்ற மூன்றாவது பெண் மற்றும் 3ஆவது கறுப்பின அழகியாவார். இதற்கு முன் லீலா லோபஸ் என்பவர் 2011ம் ஆண்டும், 1977 ஆம் ஆண்டும் ஜானிலி கம்மிஷாங் என்பவரும் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற கருப்பினப் பெண்களாவர். 

miss universe
இப்போட்டியில், டாப் 10 தரவரிசையில் இருக்கும் அழகிகள்;

மிஸ் யுனைட்டட் ஸ்டேட்ஸ், மிஸ் கொலம்பியா, மிஸ் பியூர்டோ ரிக்கோ, மிஸ் பெரு, மிஸ் இஸ்லந்,  மிஸ் பிரான்ஸ், மிஸ் இந்தோனேஷியா,மிஸ் தாய்லாந்து, மிஸ் மேக்ஸிகோ கடைசியாக மிஸ் சவுத் ஆப்பிரிக்கா வெற்றிவாகையை சூடினார்.