‘மிஸ் யுனிவர்ஸ்’ மகுடம் சூடிய பிலிபைன்ஸ் அழகி

 

‘மிஸ் யுனிவர்ஸ்’ மகுடம் சூடிய பிலிபைன்ஸ் அழகி

2018ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக பிலிபைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கேட்ரியோனா கிரே மகுடம் சூடினார்.

2018ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக பிலிபைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கேட்ரியோனா கிரே மகுடம் சூடினார்.

தாய்லாந்தின் முவாங்தாங் நகரில் நடைபெற்ற 67-வது பிரபஞ்ச அழகிப்போட்டியில் சுமார் 94 நாடுகளைச் சேர்ந்த 92 பெண்கள் பங்கேற்றனர். கடந்த 1992, 2005ம் ஆண்டுகளுக்கு பின் தாய்லாந்து நாட்டில் மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டி நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா, பசிபிக் மண்டலங்களில் இருந்து அரையிறுதிப்போட்டிக்கி 20 அழகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் முதல் 5 இடங்களில் வியட்நாம், பியூரிட்டோ ரிகோ, பிலிப்பைன்ஸ், வெணிசுலா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த பெண்கள் தகுதி பெற்றனர். இவர்களிடையே நடந்த கடும் போட்டியில் 2018-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கேட்ரியோனா கிரே தேர்வாகி மகுடம் சூட்டப்பட்டார்.

missuniverse

அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த டமாரின் கிரீன் என்ற அழகியும், 3வது இடத்தை வெணிசுலாவின் ஸ்டெபானி கட்டர்ஸ் பெற்றார். இந்த போட்டியில் இந்தியா சார்பாக மும்பையைச் சேர்ந்த நேஹல் சுதாஸமா, அரையிறுதி சுற்றுக்கு முன்னேறாமலே வெளியேறினார்.