மிஸ் சவுத் இந்தியா அழகி பட்டம் வென்ற மீரா மிதுனின் பட்டம் பறிப்பு! 

 

மிஸ் சவுத் இந்தியா அழகி பட்டம் வென்ற மீரா மிதுனின் பட்டம் பறிப்பு! 

மிஸ் சவுத் இந்தியா அழகி பட்டம் பெற்ற மீரா மிதுனின் பட்டம் பறிக்கப்பட்டது என மிஸ் சவுத் இந்தியா அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

சென்னை: மிஸ் சவுத் இந்தியா அழகி பட்டம் பெற்ற மீரா மிதுனின் பட்டம் பறிக்கப்பட்டது என மிஸ் சவுத் இந்தியா அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

தமிழில் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை மீரா மிதுன். பெங்களூரைச் சேர்ந்த இவரின் உண்மையான பெயர் தமிழ்செல்வி.  நடிப்பதற்கு முன் மிஸ் குயின் ஆஃப் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு, மிஸ் சவுத் இந்தியா ஆகிய போட்டிகளில் அழகிப்பட்டம் வென்றுள்ளார். 

இவர் தமிழ் பெண்களுக்கு அழகிப் போட்டிகளில் எளிதாக வாய்ப்பு கிடைப்பதில்லை என்பதால் தமிழ் பெண்களுக்காக அழகிப் போட்டி நடத்துவதாகவும், அதை ஜூன்3-ஆம் தேதி  ஏற்பாடு செய்திருப்பதாகவும் இரண்டு நாட்கள் முன்பு செய்தியாளர்களிடம் அறிவித்தார். இதையடுத்து அதன் காரணமாகத் தொழில் போட்டியால் சிலர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.

mira

இந்த நிலையில் அவர் அழகிப்போட்டி நடத்த அனுமதி பெறவில்லை என்றும், அவர் அழகிப்போட்டி நடத்துவதாகக் கூறி பல பெண்களிடம் பணம் வாங்கி மோசடி செய்துள்ளதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதனால், அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த ‘மிஸ் தென் இந்தியா’ பட்டத்தைப் பறிப்பதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது. தாங்கள் வழங்கிய பட்டத்தை வைத்துக்கொண்டு மோசடி வேலைகளில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மிஸ் தென் இந்தியா அமைப்பு கூறியுள்ளது. மேலும் தாங்கள் கொடுத்த பட்டத்தை மீரா மிதுனால் வேறு எங்கும் பயன்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளது.