மிஸ் இங்கிலாந்து கொரோனா பணியில் முக்கியமான பணி என்ன தெரியுமா?

 

மிஸ் இங்கிலாந்து கொரோனா பணியில் முக்கியமான பணி என்ன தெரியுமா?

கொரோனாவால் சிக்கித் தவிக்கும் நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. அங்கு, 66,052 பேர் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். இதனால், உலகளவில் கொரோனா மரணங்கள் அதிகம் நடந்த நாடுகளின் பட்டியலில் ஆறாம் இடத்தில் இங்கிலாந்து உள்ளது.

இங்கிலாந்து எல்லா நாட்டையும் விட முன்னெச்சரிக்கையாக ஃபைசர் கொரோனா தடுப்பு மருந்தை மக்களுக்கு விநியோகிக்க முடிவு செய்தது. இதற்கு பின்னணியில் மிஸ் இங்கிலாந்து ஒருவர் இருக்கிறார் என்றால் நம்பமுடிகிறதா?

இங்கிலாந்து நாட்டின் மிஸ் இங்கிலாந்து பட்டம் வென்றவர் கரினா டைரெல். இவருக்கு மருத்துவம் சார்ந்த ஈடுபாடு உண்டு. மருத்துவத்தில் பல பட்டங்களும் வாங்கியிருக்கிறார்.

மிஸ் இங்கிலாந்து கொரோனா பணியில் முக்கியமான பணி என்ன தெரியுமா?

இங்கிலாந்தில் கொரோனா தொற்று அதிகமானதும், அழகிப் போட்டியில் வென்றவர் என்ற அந்தஸ்தை எல்லாம் தூர எறிந்துவிட்டு களத்திற்கு வந்தார்.

கரீனாவின் குழு, உலகிலுள்ள முக்கிய மருத்துவர்கள், அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டிருப்போர் எனப் பலரிடம் ஆலோசித்து, இங்கிலாந்து நாட்டுக்கு ஏற்ற கொரோனா தடுப்பூசி எது என ஆராய்தது. கரினா குழுவின் முடிவில் அவர்கள் பரிந்துரைத்தது ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசி.

மிஸ் இங்கிலாந்து கொரோனா பணியில் முக்கியமான பணி என்ன தெரியுமா?

கரினா குழுவின் ஆலோசனையை இங்கிலாந்து நாட்டு அரசு ஏற்றுகொண்டது. அதனால், உடனே கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு விநியோகிக்கும் பணியைத் தொடங்கியுள்ளது. இதனால், அங்கு கொரோனா தொற்று குறையும் என கருதப்படுகிறது.

அழகிப்போட்டிதானே என்று நினைப்பவர்களுக்கு தம் செயலால், அதன் மறுபக்கத்தைக் காட்டியிருக்கிறார் மிஸ் இங்கிலாந்து கரினா.