மிஸ்டர் லோக்கல் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

 

மிஸ்டர் லோக்கல் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

மிஸ்டர் லோக்கல் படத்தை வெளியிடும் உரிமையை பிரபல சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

சென்னை: மிஸ்டர் லோக்கல் படத்தை வெளியிடும் உரிமையை பிரபல சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

சீமராஜா படத்தைத் தொடர்ந்து நடிகர்  சிவகார்த்திகேயன், இயக்குநர் எம்.ராஜேஷின் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தில் நடித்து வருகிறார். கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் நயன்தாரா நடிக்கவுள்ளார். காமெடி என்டேர்டைன்மெண்டாக உருவாகிவரும் இப்படத்தில்  யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட் பலர் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இந்நிலையில் மிஸ்டர் லோக்கல் படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை தன்வீ ஃபிலிம்ஸ் உடன் இணைந்து சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த நிறுவனம் இதற்கு முன்னதாக அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை திருச்சி மற்றும் தஞ்சையில் வெளியிடும் உரிமையை கைப்பற்றியிருந்தது. அதேபோல் நடிகர் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தின் தமிழக உரிமையை பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.