மிஸ்டர் ஜெயக்குமார் சார் தோழமையைப் பற்றி நீங்க சொல்லி கொடுக்காதீங்க – மாணிக்கம் தாகூர்

 

மிஸ்டர் ஜெயக்குமார் சார் தோழமையைப் பற்றி நீங்க சொல்லி கொடுக்காதீங்க – மாணிக்கம் தாகூர்

தமிழ்நாட்டில் மதுவை சுத்தமாக முடித்துவிடலாம், இந்த ஆண்டின் தேவை மதுவிலக்குதான் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மதுவை சுத்தமாக முடித்துவிடலாம், இந்த ஆண்டின் தேவை மதுவிலக்குதான் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

திமுக- காங்கிரஸ் இடையே கூட்டணி விரிசல் ஏற்பட்டிருக்கும் நிலையில் துரைமுருகன்,  “கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி விலகிச் சென்றால் எங்களுக்குக் கவலையில்லை. அதனால், எந்த நஷ்டமும் இல்லை. காங்கிரஸுக்கு ஓட்டு கிடையாது. அவர்கள் விலகுவதைப் பற்றி கவலைப்படவில்லை. எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை” என தெரிவித்தார். இதனை விமர்சிக்கும் விதமாக அமைச்சர் ஜெயக்குமார், “ காங்கிரஸ் கட்சியினருக்கு மானம் இருக்கா இல்லை மானம் திரிந்து விட்டதா?” என பேசியிருந்தார். 

Manickam_Tagore

இதற்கு பதிலளிக்கும் விதமாக விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி மாணிக்கம் தாகூர், “யாருக்கும் யாரும் அடிமை இல்லை, யாருடைய அவமானங்களையும் யாரும் ஏற்க முடியாது. காங்கிரஸ் கட்சிக்கு தோழமையைப் பற்றி சொல்லி கொடுக்க அவசியமில்லை. துரைமுருகன் வரலாற்றை சரியாக படித்து பார்த்து பேசவேண்டும். ஸ்டாலினை முதலமைச்சராக விடாமல் திமுகவில் பெரிய கூட்டம் செயல்படுகிறது என்பது தெரிகிறது 

அதிமுக  பயந்து அரசியல் செய்கிறது. டெல்லி அரசுக்கு பயந்து அரசை நடத்துகிறது. ஆர்எஸ்எஸ்க்கும் பிஜேபிக்கு யார் விசுவாசமாக இருக்கிறார்கள் என்பதை காட்டுவதிலேயே ஓபிஎஸ் இபிஎஸ் குறியாக உள்ளனர். அதிமுகவை பொறுத்தவரை தமிழ் நாட்டின் நலனில் அக்கறை இல்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சீமானை தவிர வேறு யாரும் தனித்து நிற்பதற்கு தயாராக இல்லை. சீமான் நோட்டாவோடு போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறார். திமுக வேண்டுமானால் தனித்து நின்றுதான் பார்க்கட்டுமே… தமிழ்நாட்டில் எங்கள் பலம் எவ்வளவு உள்ளதோ அதற்கேற்ப குரியுரிமை உரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். எங்கள் பலம் என்பதை என்னவென்பதை கைவிரித்துக்காட்டி விட்டோம்” எஅ தெரிவித்தார்.