மிளகாய் வறுவல்… பச்சைப்புளி ரசம்… விவசாயி உணவகத்தின் வித்தியாசச் சுவை!

 

மிளகாய் வறுவல்… பச்சைப்புளி ரசம்… விவசாயி உணவகத்தின் வித்தியாசச் சுவை!

ஈரோட்டில் இருந்து கோபிச்செட்டி பாளையம் போகும் போது கோபிக்கு இரண்டு கி.மீ முன்னால் குள்ளம்பாளையம் என்கிற ஊர் வருகிறது.இந்தக் குள்ளம்பாளையத்தில் அந்தக்கால டெண்ட் கொட்டகை சைசில் ஒரு கீற்றுக்கொட்டகையில் துவங்கப்பட்டு இருக்கிறது விவசாயி உணவகம். 

ஈரோட்டில் இருந்து கோபிச்செட்டி பாளையம் போகும் போது கோபிக்கு இரண்டு கி.மீ முன்னால் குள்ளம்பாளையம் என்கிற ஊர் வருகிறது.இந்தக் குள்ளம்பாளையத்தில் அந்தக்கால டெண்ட் கொட்டகை சைசில் ஒரு கீற்றுக்கொட்டகையில் துவங்கப்பட்டு இருக்கிறது விவசாயி உணவகம். 

Hotel

புதிய உணவகம்தான்,ஆனால் பழைமையான கொங்குநாட்டு அசைவச் சமையலின் ருசியை துல்லியமாக கொண்டுவந்து இருக்கிறார்கள்.
சாப்பாடு 70 ரூபாய்.மற்ற கறி வகைகளில் குடல் 50 ரூபாய்,மட்டன் வறுவல் 150 ரூபாய்.அதுதான் அதிகபட்ச விலையுள்ள பண்டம்.பொதுவாக கொங்குப்பகுதிச் சமையலில் பட்டை,சோம்பு,லவங்கம்,கல்பாசி,கிராம்புக்கெல்லாம் இடமில்லை. காய்ந்த மிளகாய்,மிளகு,சீரகம்,இஞ்சி,பூண்டு,பச்சை மிளகாய் அவளவுதான். ஆனால் இவற்றை மட்டும் வைத்துக்கொண்டே அவர்களால் எத்தனை விதவிதமான ருசிகளைத் தரமுடிகிறது என்பதற்கு இந்த விவசாயி உணவகம் ஒரு உதாரணம்.

 




சிக்கன் என்றால் இங்கே நாட்டுக்கோழி மட்டும்தான் வாசலில் பெரிய ஃபிளக்சே வைத்திருக்கிறார்கள். ஒரிஜினல் நாட்டுக்கோழி மண்சட்டி வறுவல் என்று. பண்ணைக்கோழி,பிராய்லர் இவற்றை வாங்குவதில்லை.சிக்கனில் மூன்று ஐட்டங்கள் இருக்கின்றன.சிக்கன் பள்ளிப்பாளையம், சிந்தாமணி சிக்கன்,கோழிமிளகாய் வறுவல், மூன்றுமே சிறப்பாக இருக்கின்றன. சிந்தாமணி சிக்கன் கிரேவியில் முட்டை,வெங்காயம் சேர்த்து சிந்தாமணி ஆம்லெட் என்று புதிதாக ஒரு ஆம்லெட் போடுகிறார்கள் இங்கே.
மட்டன் வறுவல் நல்ல காரத்துடன் இருக்கிறது. மட்டன் குழம்பும் அதே காரத்துடன்,ஆனால் தண்ணியாக இருக்கிறது. சுவையோ அள்ளுகிறது.அந்தக் காரத்தை மீறி அதன்சுவை அள்ளி அள்ளி உள்ளே போட வைக்கிறது.குடலில் இரண்டு வெரைட்டி தருகிறார்கள்,குடல் பொரியல்,குடல் சூப் இந்த இரண்டில் குடல் சூப் சூப்பர்.

Rasam

கடைசியாகக் கொங்கு ஸ்பெஷல் பச்சை புளி ரசம் தருகிறார்கள், அத்தனை சுவையாக இருக்கிறது. ஒரு முறை இது எல்லாவற்றையும் சுவைத்தவர் அடுத்த முறை வந்தால் நேராக பச்சைப்புளி ரசம், கோழி மிளகாய் வறுவல் என்று ஆர்டர் செய்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.இப்போதுதான் துவங்கி இருக்கிறார்கள்.விரைவில் மாலை நேரத்தில் கோதுமை,மற்றும் சிறுதானிய தோசைகள் வழங்க திட்டம் வைத்து இருக்கிறார்கள்.வாழ்க!.