மிலாது நபி பண்டிகை நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் நவம்பர் 21 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

 

மிலாது நபி பண்டிகை நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் நவம்பர் 21 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

அன்பு,சகோதரத்துவத்தினை போற்றிய இறை தூதர் முகமது நபிகள் பிறந்த தினம் நவம்பர் மாதம் 21 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இறை தூதர் முகமது நபிகள் பிறந்த தினத்தை மிலாது நபி விழாவாக மகிழ்ச்சியுடன் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மிலாது நபி பண்டிகை முகமது நபிகள் பிறந்த மாதமான நவம்பர் மாதத்தில்  கொண்டாடப்படுவது வழக்கம். 

இந்தாண்டிற்கான மிலாது நபி பண்டிகை நவம்பர் மாதம் 21 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது . முகமது நபிகள் அவர்கள் இஸ்லாமிய கொள்கைகளை மக்களிடம் அவருடைய எளிமையான உறையாடல்கள் மூலம் பல்வேறு ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டுசேர்த்த பெருமையக்கு உரியவர் ஆவார்.

mosque

இஸ்லாமிய மக்களின் புனித நூலான  திருக்குரான்  முகம்மது நபிக்கு, ஜிப்ரயீல் என்ற வானவர் மூலமாக இறைவனால் சிறுகச் சிறுக சொல்லப்பட்ட அறிவுரைகள், சட்ட திட்டங்கள், தொன்மங்கள், செய்திகளின் தொகுப்பு என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை ஆகும்.

இஸ்லாமிய சட்ட முறைமையான சரியத் சட்டத்தின் அடிப்படையாகவும் குரான் விளங்குகின்றது. ஆதம் முதல் முகம்மது நபி வரையிலான இஸ்லாமிய இறைதூதர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்ட பல வேதங்களில், இது இறுதியானது என்றும் முகம்மது நபியின் இறைத்தூதர் பட்டத்திற்கான அத்தாட்சி எனவும் குரானைப் பற்றி இஸ்லாம் விளக்குகின்றது .

 

நபிகளார் சிறு வயது முதலே உயரிய ஒழுக்கப் பண்பாளராகவே இருந்தார். மென்மையும், நளினமும் அவரது அணிகலன்களாகத் திகழ்ந்தன. சக மனிதர் மீது அவர் கொண்ட அன்பும், நேசமும் அளப்பரியது. இளம் வயதிலேயே தந்தையையும், தாயையும் இழந்த அனாதையான நபிகளார், சக மனிதர்களின் துன்பங்களிலிருந்து அவர்களை மீட்டெடுக்கும் தாயாக இருந்தார்.

mosque

நபிகளார் காலத்தில், சமூகத்தில் நிலவிவந்த சீர்கேடுகள் சதா அவரை அலைக்கழிக்க, அவற்றிற்கான தீர்வு தேடி அவர் தனிமையில் இருக்கலானார். அதற்காக அவர் மக்காவுக்கு வெளியில் இருந்த ஹிரா மலையின் நூர் என்னும் குகையில் தனித்தும், விழித்தும், பசித்துமிருக்க நேர்ந்தது. சக மனிதர்களின் மீதான இத்தகைய கவலையால் இறைவனின் தரப்பிலிருந்து பெற்றதுதான் திருக்குர்ஆன் என்னும் வாழ்வியல் வழிகாட்டியின் துவக்கமானது.

எது பிறருக்கு அருளுரையாய் இறைவனின் தரப்பிலிருந்து வழங்கப்பட்டதோ அதன்படி தம்மை வடிமைத்துக் கொண்டு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார் அவர். அந்த இறை வழிகாட்டுதல் ஒன்றே மனிதப் பிரச்சினைகளுக்கான தீர்வு என்று உறுதியாக நம்பினார். அதை, உற்றார், உறவினர், அண்டை, அயலார் என்று அனைத்துத் தரப்பிலும் சேரக்க முயன்றார்.மிகவும் இனிய வார்த்தைகளால்,மென்மையான போக்கால் தமது பரப்புரைகளைச் சுமந்து சென்றார். 

mosque

இத்தனை சிறப்புகள் வாய்ந்த முகமது நபிகள் பிறந்த தினத்தினை உலகம் முழுவதும் முதலில் கொண்டாடப்படும் பழக்கம் இருந்ததில்லை காலப்போக்கில் முகமது நபிகள் பிறந்த நாளை மக்கள் படி படியாக கொண்டாட தொடங்கினர் என்பது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.