மிருகசீரிடம் நட்சத்திரகாரர்களின் குணநலன்களும் வழிபாட்டு ஸ்தலங்களும்!

 

மிருகசீரிடம் நட்சத்திரகாரர்களின் குணநலன்களும் வழிபாட்டு ஸ்தலங்களும்!

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்பான குணநலன்கள் மற்றும் அவர்கள் வழிபட வேண்டிய கோயில்கள் பற்றி பார்போம்.

நட்சத்திர வரிசையில் ஐந்தாவதாக உள்ள மிருகசீரிடம் நட்சத்திரம் இரண்டு ராசிகளில் இடம்பெறும் நட்சத்திரம். இந்த நட்சத்திரகாரர்கள் தேசத்தின் மீது மிகுந்த பற்றுகொண்டிருப்பீர்கள்.

மன உறுதி மிக்கவர்களாகவும், எதிலும் உறுதியான நம்பிக்கை கொண்டிருப்பவர்களாகவும் இருப்பீர்கள். பரந்த நெற்றியும், வலிமையான உடற்கட்டும் கொண்டவர்களாக இருப்பீர்கள். 

miru

எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டே இருப்பீர்கள்.பெரியவர்களிடம் பணிவுடன் நடந்துகொள்வீர்கள். தவறுகளைத் தட்டிக் கேட்பீர்கள். கல்வியில் அவ்வளவாக ஆர்வமிருக்காது என்றாலும், பொது அறிவை வளர்த்துக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கல்வியில் தடை ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் ஒழுங்குமுறையைக் கடைப்பிடிப்பீர்கள். கடினமாக உழைப்பதில் சளைக்க மாட்டீர்கள்.

மற்றவர்களைக் கவரும் வகையில் பேசுவீர்கள் எதையும் உடனே கிரகித்துக்கொள்வீர்கள்.கஷ்டங்கள் அடுக்கடுக்காக வந்தாலும் சர்வசாதாரணமாகக் கடந்து சென்றுவிடுவீர்கள்.

miru

மற்றவர்களுக்கு விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் வெளியிடங்களில் அதிக நண்பர்களைப் பெற்றிருப்பீர்கள்.

பொதுவாகவே மொழிப்பற்றும் இனப்பற்றும் அதிகம் இருக்கும். கண்டம் விட்டு கண்டம் சென்றாலும் தாய் நாட்டை மறக்காதவர்கள்.

யார் சொல்லுக்கும் கட்டுப்படாமல் சுய சிந்தனையோடு எடுக்கும் காரியங்களை செய்து முடிப்பார்கள். அபார நினைவாற்றல் இருக்கும். முன் கோப அதிகமிருந்தாலும் மற்றவர்களிடம் தாழ்ந்து நடக்கும் பண்பும் இருக்கும்.

வெளி நபர்களிடம் விட்டுக் கொடுக்கும் பண்பிருக்கும் அளவிற்கு வீட்டில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடக்க மாட்டார்கள்.

பெண்களுக்கு தாய் வழியில் நிறைய வசதிகள் வந்து கொண்டேயிருக்கும். செல்வம் செல்வாக்கிற்கு பஞ்சம் இருக்காது. 

miru

மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிகமாக உழைப்பதால் கை, கழத்து எலும்பு போன்றவற்றில் வலியும், வயிற்று வலி குடல் இறக்கம், நீரிழவு, வாதம் போன்றவற்றில் பாதிப்பும் உண்டாகும்.

மிருக சீரிஷ நட்சத்திர காரர்களின் ஸ்தல விருச்சம் கருங்காலி மரமாகும். இம்மரத்தை வழிபடுவதால் நல்ல பலன்களை பெற முடியும். 

karungali

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான், மகாவிஷ்ணு

வழிபாட்டு ஸ்தலங்கள்:

பழநி மற்றும் திருக்கண்ணபுரம்,எண்கண் முருகன் கோயில்களுக்கு சென்று வருவதால் பல்வேறு நன்மைகளை பெறலாம்.

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலுள்ள சந்திர சூடேஸ்வரர் மரக தாம்பிகை திருக்கோயில் 

கிருஷ்ண கிரி:

தர்மபுரிக்கு வடக்கு 48 கி.மீ தொலைவிலுள்ள சந்திர மௌலிஸ்வரர், பார்வதியம்மை திருக்கோயில்

முசிறி:

கரூர் மாவட்டம் காவிரியின் வடகரையிலுள்ள கற்பூர வல்லி சந்திர மௌலீஸ்வரர் திருக்கோயில்

சென்னைக்கு அருகிலுள்ள மதுராந்தகத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ஜனகவல்லி, உடனுறை ஏரி காத்த ராமன் எனப்படும் ஸ்ரீ கோதண்ட ராமன் திருக்கோயில் ஆகியவையாகும்.