மிராமர் கடற்கரையில் கோவா முதல்வர் பாரிக்கரின் இறுதிச் சடங்கு

 

மிராமர் கடற்கரையில் கோவா முதல்வர் பாரிக்கரின் இறுதிச் சடங்கு

கணையப் புற்றுநோயால் உயிரிழந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் இறுதிச் சடங்கு மிராமர் கடற்கரையில் நடைபெறவுள்ளது.

கோவா: கணையப் புற்றுநோயால் உயிரிழந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் இறுதிச் சடங்கு மிராமர் கடற்கரையில் நடைபெறவுள்ளது.

நீண்ட நாட்களாக கணையப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் (63) நேற்று காலமானார். அவர் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் செயல்பட்டவர். அரசியல் தலைவர்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

உள்துறை அமைச்சகம் மனோகர் பாரிக்கருக்கு அரச மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என அறிவித்துள்ளது. கோவா, மிராமர் கடற்கரையில் இன்று மாலை 5 மணிக்கு அவரது இறுதிச் சடங்கு நடைபெற இருக்கிறது. முதலாவது கோவா முதல்வர் தயானந்த் பண்டோத்கரின் உடல் தகனம் செய்யப்பட்டதும் இதே இடத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.

மனோகரி பாரிக்கரின் மறைவு தேசிய துக்க நாளாக அனுசரிக்கப்படும் என மத்திய அரசாங்கம் அறிவித்திருக்கிறது. நாடு முழுவதும் இன்று தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிட வலியுறுத்தப்பட்டுள்ளது.