மிரள வைக்கும் வைகோ… கண்ணீர் வடித்துக் கதறும் காங்கிரஸ்..!

 

மிரள வைக்கும் வைகோ… கண்ணீர் வடித்துக் கதறும் காங்கிரஸ்..!

தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தை ஆகியவை அடங்கிய கூட்டணிதான் இன்று தென்னிந்தியாவில் மிகப்பெரிய வெற்றிக் கூட்டணியாக பார்க்கப்படுகிறது.

மிரள வைக்கும் வைகோ… கண்ணீர் வடித்துக் கதறும் காங்கிரஸ்..!

ஆனால் இந்தக் கூட்டணிக்குள் குண்டு வைக்கும் வேலையை சிலர் துவங்கி விட்டதாக கண்ணீர் விட துவங்கியுள்ளது காங்கிரஸ். காரணம், அந்த கட்சிக்குதான் பேரிழப்பு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது

தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தை ஆகியவை அடங்கிய கூட்டணிதான் இன்று தென்னிந்தியாவில் மிகப்பெரிய வெற்றிக் கூட்டணியாக பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்தக் கூட்டணிக்குள் குண்டு வைக்கும் வேலையை சிலர் துவங்கி விட்டதாக கண்ணீர் விட துவங்கியுள்ளது காங்கிரஸ். காரணம், அந்த கட்சிக்குதான் பேரிழப்பு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அதாவது, காஷ்மீர் விஷயத்தில் மோடி – அமித் ஷா டீம் அதிரடி நடவடிக்கை எடுத்த பின், ராஜ்யசபாவில் இது பற்றிய வாதம் நிகழ்ந்தது. அதில் பேசிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பழைய வரலாறுகளை எடுத்து வைத்துப் பேச துவங்கினார். அப்போது ‘காஷ்மீரின் நிலைக்கு காரணம் அன்றைய காங்கிரஸ் எடுத்த தவறான முடிவுதான்.’ என்று நேருவையும் ஒரு பிடி பிடித்துவிட்டார்.

தமிழகத்தில் கூட்டணியில் இருக்கும் கட்சியே இப்படி தங்களை தாக்குவதில் அதிர்ந்து போன காங்கிரஸ் ஷாக்கடித்துக் கிடக்க, பா.ஜ.க.வோ ஏக சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தது. இந்த விவகாரம் தி.மு.க. கூட்டணியில் பற்றி எரிய துவங்கியது . தமிழக காங்கிரஸ் தலைவரான கே.எஸ். அழகிரியோ வைகோவை விளாசித் தள்ளிவிட்டார். பதிலுக்கு ம.தி.மு.க. முறைக்க என  போர்க்களமாகி விட்டது.

ஆனாலும் நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸின் நிலை சிக்கலாகத்தான் இருப்பதாக சூழல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் பா.ஜ.க.வை தி.மு.க. நெருங்குவதாகவும், அதற்கு பாலமாக வைகோ செயல்படுவதன் விளைவே இந்த பஞ்சாயத்துக்கள் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

மக்களவை தேர்தல் வெற்றிக்குப் பின் காங்கிரஸார் சிலர் பேசிய பேச்சுக்களை ஸ்டாலின் ரசிக்கவில்லையாம். மேலும் மத்தியில் ராகுல் வராத நிலையிலும், வரலாற்றுச் சரிவை அக்கட்சி சந்தித்திருக்கும் நிலையிலும் இனியும் அவர்களை நம்பிக் கொண்டிருந்தால் நமக்கும் இதே கதிதான் என்று முடிவெடுத்துவிட்டார் ஸ்டாலின். வைகோவை வைத்து காய் நகர்த்தல்களை செய்கிறார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

-thijai