மிரட்டிய வில்லியம்சன்.. பதிலடி கொடுத்த சமி! திரில் சூப்பர் ஓவர்.. இரண்டு சிக்ஸர் விளாசி வெற்றியை பெற்று தந்த ரோகித்!

 

மிரட்டிய வில்லியம்சன்.. பதிலடி கொடுத்த சமி! திரில் சூப்பர் ஓவர்.. இரண்டு சிக்ஸர் விளாசி வெற்றியை பெற்று தந்த ரோகித்!

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது டி20 போட்டி ஹாமில்டனில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச முடிவு செய்தது.  

இந்தியா – நியூசிலாந்து 3வது டி20 போட்டி சமனில் முடிவடைந்தது. இதனால் சூப்பர் ஓவர் நடைபெறுகிறது.

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது டி20 போட்டி ஹாமில்டனில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச முடிவு செய்தது.  

rohit-sharma-01

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா அதிரடியாக ஆடி 65 ரன்களும், கேஎல் ராகுல் 27 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். 3வது இடத்தில் வந்த துபெ 3 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.

பின்னர் வந்த கோஹ்லி 38 ரன்கள் அடிக்க, 20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழந்து 179 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக பென்னட் 3 விக்கெடுகளை கைப்பற்றினார்.

 

அடுத்ததாக, சர்சையான இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு துவக்க வீரர்கள் கப்டில் 31 மற்றும் முன்றோ 14 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த கேப்டன் வில்லியம்சன் 95 ரன்கள் அடித்து அணியை வெற்றியை நோக்கி எடுத்து சென்றார்.

நியூசிலாந்து அணிக்கு இறுதி ஓவரில் 9 ரன்கள் தேவைபட்டது. சமி பந்துவீச எடுத்து வரப்பட்டார். அவர் 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் இந்த போட்டி சமனில் முடிந்தது. ஆட்டம் சூப்பர் ஓவராக மாற்றப்பட்டது.

நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்ய வந்தது. இந்திய அணி சார்பில் பும்ராஹ் பந்து வீசினார். இவர் 17 ரன்கள் விட்டுக்கொடுக்க, ஆட்டம் நியூசிலாந்து பக்கம் மீண்டும் திரும்பியதோ? என அனைவரும் பதறினர்.

இந்நிலையில், இந்திய அணிக்கு ரோஹித், ராகுல் இருவரும் ஆட வந்தனர். கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டபோது ரோகித் சர்மா அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள் விளாசி ஆட்டத்தை இந்தியா பக்கம் திருப்பி, வெற்றி பெறச்செய்தார்.

india-vs-newzealand

இதன் மூலம் இந்திய அணி 3-0 என டி20 தொடரை கைப்பற்றியது. மீதம் இரண்டு டி20 போட்டிகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.