மிரட்டல் உருட்டலுக்கெல்லாம் பயப்பட மாட்டோம் – எம்.பி. ஜோதிமணி

மிரட்டல் உருட்டலுக்கெல்லாம் பயப்பட மாட்டோம் – எம்.பி. ஜோதிமணி

அதிமுகவில் மிரட்டல் உருட்டலுக்கெல்லாம் நாங்களும், மக்கள் பயப்பட மாட்டார்கள் என்றும், இதனையெல்லாம் மக்களவை தேர்தலிலேயே பார்த்துவிட்டோம் என்றும் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார். 

அதிமுகவில் மிரட்டல் உருட்டலுக்கெல்லாம் நாங்களும், மக்கள் பயப்பட மாட்டார்கள் என்றும், இதனையெல்லாம் மக்களவை தேர்தலிலேயே பார்த்துவிட்டோம் என்றும் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் வரும் 27,28 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, கரூர் மாவட்டத்தில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திமுக சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி, கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி ஆகியோர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர். தாந்தோணி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து எம்.பி.ஜோதிமணி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

jothimani

அப்போது பேசிய எம்.பி.ஜோதிமணி, “மக்கள் யாருக்கு வாக்களிப்பார் என மக்களுக்கே தெரியும். அதனால் தான் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் 3 ஆண்டுகளாக அதிமுக காலம் தாழ்த்தியது. இதனால் மத்திய அரசிடமிருந்து நமக்கு வர வேண்டிய 11 ஆயிரத்து 100 கோடி ரூபாய் வராமல் தேங்கியுள்ளது. அதிமுகவின் உருட்டல் மிரட்டலுக்கு மக்கள் பயப்பட மாட்டார்கள். அதனை மக்களவைத் தேர்தலிலேயே பார்த்துவிட்டார்கள். அதிமுகவினருக்கு வாக்குசேகரிக்க உரிமை உண்டு ஆனால் மிரட்டுவதற்கு உரிமை இல்லை” எனக்கூறினார்.