மியூசிக் ஃபெஸ்டிவலில் மதுபோதையில் நடனமாடிய இளைஞர்கள் கீழே விழுந்து உயிரிழப்பு!

மியூசிக் ஃபெஸ்டிவலில் மதுபோதையில் நடனமாடிய இளைஞர்கள் கீழே விழுந்து உயிரிழப்பு!

கோவாவில் நடைபெற்றுவரும் சன்பர்ன் எலக்ட்ரானிக் டான்ஸ் மியூசிக் ஃபெஸ்டிவலில் மதுபோதையில் நடனமாடிய இரண்டு இளைஞர்கள் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவாவில் நடைபெற்றுவரும் சன்பர்ன் எலக்ட்ரானிக் டான்ஸ் மியூசிக் ஃபெஸ்டிவலில் மதுபோதையில் நடனமாடிய இரண்டு இளைஞர்கள் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாகடோர் கடற்கரை கிராமத்தில் ஆண்டுதோறும் வருட கடைசியில் மியூசிக் பெஸ்டிவல் நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் சன்பர்ன் எலக்ட்ரானிக் டான்ஸ் மியூசிக் ஃபெஸ்டிவளில் ஆந்திராவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் இருவரும் மதுபோதையில் நடனமாடியதாக கூறப்படுகிறது. மதுவுடன் மேலும் சில போதைப்பொருட்களும் அந்த இளைஞர்கள் உட்கொண்டுள்ளனர். இந்நிலையில் நடனமாடிக்கொண்டிருக்கும்போதே திடீரென இருவரும் கீழே விழுந்து மயங்கினர். அவர்களை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள், இளைஞர்கள் விழுந்தவுடன் உயிரிழந்ததாக தெரிவித்தனர். உடனே மியூசிக் பெஸ்டிவல் நடத்திய உரிமையாளர், காவல்துறையினர் தகவல் அளித்துள்ளார். 

music event

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இளைஞர்களின் உடல்களை கைப்பற்றி மாபூசா நகர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். அந்த இளைஞர்கள் ஆந்திராவை சேர்ந்த சாய் பிரசாத் மற்றும் வெங்கட் என தெரியவந்துள்ளது. மாரடைப்பு அல்லது போதைப்பொருள் அளவு அதிகமாக பயன்படுத்தியதன் விளைவாக இளைஞர்கள் உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்