மியான்மர் பச்சை மாணிக்க கல் சுரங்கத்தில் நிலச்சரிவு; 50 பேர் பலி!

 

மியான்மர் பச்சை மாணிக்க கல் சுரங்கத்தில் நிலச்சரிவு; 50 பேர் பலி!

தொழிலாளர்கள் அனைவரும் ஆழமான பகுதியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நிலச்சரிவு ஏற்பட்டதால் அவர்களால் அங்கிருந்து வெளியேற முடியாமல் மண் புதையலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன

நேய்பிய்டாவ் (மியன்மார்): பச்சை மாணிக்க கற்களை வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மியான்மர் நாட்டில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மியான்மர் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கச்சின் மாநிலத்தில் செயல்பட்டு வரும் பச்சை மாணிக்க கற்களை வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் அந்நாட்டை சேர்ந்த இரண்டு நிறுவனங்களை சேர்ந்த சுமார் 54 தொழிலாளர்கள் பணி புரிந்து வந்துள்ளனர்.

myanmar mine

இந்நிலையில், இந்த சுரங்கத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. தொழிலாளர்கள் அனைவரும் ஆழமான பகுதியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நிலச்சரிவு ஏற்பட்டதால் அவர்களால் அங்கிருந்து வெளியேற முடியாமல் மண் புதையலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து அப்பகுதி எம்.பி., கூறுகையில், சேற்றின் அடியில் தொழிலாளர்கள் புதைந்திருப்பதால் அவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை. உடல்களை மீட்பதிலும் சிரமம் உள்ளது. இடிபாடுகளில் இருந்து மூன்று பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

myanmar mine

அதேசமயம், இந்த விபத்தை உறுதிபடுத்தியுள்ள மியான்மர் தகவல்துறை அமைச்சகம் தனது முகநூல் பக்கத்தில் ஷ்வே நகர் கோ கவுங் மற்றும் மியான்மர் துரா ஆகிய நிறுவனங்களை சேர்ந்த 54 தொழிலாளர்கள் மாயம் என பதிவிட்டுள்ளது.

இதையும் வாசிங்க

இலங்கையில் தொடரும் பதற்றம்; வெடிகுண்டுகளுடன் நுழைந்த வாகனங்கள்!