மியான்மருக்கு சுற்றுலா சென்ற நபர் உயிரிழப்பு: வீடியோ காலில் இறுதிச்சடங்கு.. கண்கலங்க வைக்கும் சம்பவம்!

 

மியான்மருக்கு சுற்றுலா சென்ற நபர் உயிரிழப்பு: வீடியோ காலில் இறுதிச்சடங்கு.. கண்கலங்க வைக்கும் சம்பவம்!

இறுதிச் சடங்கை உறவினர்கள் வீடியோ காலில் பார்த்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் இந்த இக்கட்டான சூழலில், வெளிநாட்டுக்கு சென்றவர்கள் அங்கிருந்து திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் மியான்மருக்கு சுற்றுலா சென்ற நபரின் இறுதிச் சடங்கை உறவினர்கள் வீடியோ காலில் பார்த்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ttn

வேலூர் வசந்த புரத்தில் வசித்து வந்த  தென்னரசு(59), வேலூர் மாநகராட்சியில் உதவிப் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறார். இவரும் இவரது மனைவியும் கடந்த மார்ச் மாதம் மியான்மருக்கு சுற்றுலா சென்ற நிலையில், ஏப்ரல் மாதம் வீடு திரும்பவிருந்தனர். ஆனால் கொரோனா வைரஸ் பரவலால் போக்குவரத்து சேவை அனைத்தும் முற்றிலுமாக முடக்கப்பட்டதால் அவர்களால் வீடு திரும்ப முடியவில்லை. இதனால் அவர்கள் ரங்கூன் என்னும் இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  

ttn

நேற்று தென்னரசுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார். அதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி அவரது உடலை இந்தியாவுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அதன் பின்னர், தமிழ் சங்கத்தினர் உதவியுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டதை அவரது உறவினர்கள் வீடியோ காலில் பார்த்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.