மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டை மணந்த பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மி!

 

மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டை மணந்த பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மி!

கேரளாவைச் சேர்ந்த பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மி, மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் அனூப் என்பவரை கரம் பிடித்தார்.

திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மி, மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் அனூப் என்பவரை கரம் பிடித்தார்.

பார்வையற்ற பின்னணி பாடகியான வைக்கம் விஜயலக்ஷ்மி, தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் தனது தனித்துவமான குரலால் ரசிகர்களை கவர்ந்தவர். பாடல் மட்டுமல்லாது சிறந்த வீணை கலைஞராகவும் விஜயலக்ஷ்மி இருந்து வருகிறார்.

இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த மிமிக்ரி கலைஞர் அனூப் என்பவருடன் கடந்த மாதம் வைக்கம் விஜயலக்ஷ்மிக்கு திருமணம் நிச்சயமானது. அதைத் தொடர்ந்து இன்று (அக்.22) வைக்கமில் உள்ள கோவில் ஒன்றில் விஜயலக்ஷ்மி மற்றும் அனூப் திருமணம் நடைபெற்றது.

vaikomvijayalakshmi

வைக்கம் விஜயலக்ஷ்மி மற்றும் அனூப் தம்பதிக்கு மலையாள மற்றும் தமிழ் திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.