மின் கம்பம் ஏறி பழுதுபார்க்கும் பணி…அசால்ட்டாக ஏறி தேர்ச்சி பெற்ற இரண்டு குழந்தைகளின் தாய்!

 

மின் கம்பம் ஏறி பழுதுபார்க்கும்  பணி…அசால்ட்டாக ஏறி தேர்ச்சி பெற்ற  இரண்டு குழந்தைகளின் தாய்!

மின் பழுதுபார்க்கும் வேலையை செய்துகாட்டியுள்ளார். இதனால் அவர்  உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

பெண்கள் பல துறைகளில் சாதித்து வருகிறார்கள்.அவர்கள் கால்பதிக்காத துறையே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் பெண் ஒருவர் மின்சார கம்பத்தில் ஏறி பழுதுபார்க்கும் பணியில் சேர்ந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். 

ttn

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் புஷ்பராஜ். இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு இரண்டு  குழந்தைகள் உள்ளனர். ஜோதி ஐடிஐ தொழிற்கல்வியில் டிப்ளமோ பட்டம் பெற்ற நிலையில் மின்கம்பம் ஏறி பழுது பார்த்தல் வேலைக்கு  விண்ணப்பித்துள்ளார். இதற்கான உடற்தகுதித் தேர்வு நேற்று நடைபெற்ற நிலையில் அதில் பங்கேற்ற ஜோதி, அசால்ட்டாக மின்கம்பம் ஏறி, மின் பழுதுபார்க்கும் வேலையை செய்துகாட்டியுள்ளார். இதனால் அவர்  உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

ttn

மொத்தம் 1,170 பேர் உடல் தகுதி சோதனைக்கு வந்துள்ளனர். இவர்களில் 337 பேர் தேர்வாகியுள்ளனர். மேலும் இந்த தேர்வுக்கு வந்த 61 பெண்களில் இவர் ஒருவர் மட்டுமே உடற்பயிற்சி தேர்வில் தகுதி பெற்றுள்ளார்.  இதுவரை இந்த பணியில் மொத்தம் 3 பெண்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து கூறும் ஜோதி கணவர் புஷ்பராஜ்,  இதுவரை தேர்வாகியுள்ள மூன்று பெண்களில் என் மனைவியும் இருப்பது மகிழ்ச்சியைத் தந்துள்ளது என்று கூறி பூரிப்படைகிறார்.