மின்விசிறிகளில் ‘ஸ்பிரிங்’ : தற்கொலைகளை தொழில் நுட்பம் பயன்படுத்தி தடுக்க ஐஐடி நிர்வாகம் முடிவு!

 

மின்விசிறிகளில் ‘ஸ்பிரிங்’ : தற்கொலைகளை தொழில் நுட்பம் பயன்படுத்தி தடுக்க ஐஐடி நிர்வாகம் முடிவு!

விடுதியில் தங்கும் அனைத்து மாணவர்களின் அறையில் உள்ள மின்விசிறிகளில் ஸ்பிரிங் பொருத்தப்பட உள்ளது.

சென்னை ஐஐடி கல்லூரி வளாகத்தில் மாணவர்களின் தற்கொலை அதிகமாக நடந்து வருவதாகப் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் கேரளாவைச் சேர்ந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

fathima

கடந்த ஆண்டிலிருந்து இந்த ஆண்டு வரை 5 மாணவர்கள் கல்லூரி வளாகத்திலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கெல்லாம், அங்கு மாணவர்களுக்குப் படிப்பு ரீதியாக மன அழுத்தம்  ஏற்படுவதே காரணம் என்று கூறப்படுகிறது. 

iit

இதனால், இந்த தற்கொலைகளைத் தடுக்க  ஐஐடி கல்லூரி நிர்வாகம் ஒரு புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. அதாவது, விடுதியில் தங்கும் அனைத்து மாணவர்களின் அறையில் உள்ள மின்விசிறிகளில் ஸ்பிரிங் பொருத்தப்பட உள்ளது. அந்த ஸ்பிரிங் பொருத்தப்பட்டால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கும் போது அதன் மூலம் அவர்கள் கீழே விழுந்து விடுவார்கள்.

iit

அதனால், இதனை விடுமுறைக்குச் சென்ற மாணவர்கள் திரும்பி வருவதற்குள் நடத்த  ஐஐடி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும், அங்குப் பயிலும் மாணவர்கள் மன ரீதியாக வலிமை அடைய கவுன்சிலிங் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. ஐஐடி நிர்வாகத்தின் இந்த முடிவிற்கு ஸ்பிரிங் பொருத்தினால் எப்படி தற்கொலைகளைத் தடுக்க முடியும் என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.