மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா.. முதல்வர் இன்று ஆலோசனை!

 

மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா.. முதல்வர் இன்று ஆலோசனை!

கோயம்பேடு சந்தையில் பணியாற்றிய ஊழியர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் சுமார் 527 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,550 ஆக உயர்ந்துள்ளது. நேற்று அதிகப்படியான பரவலுக்கு முக்கிய காரணம் கோயம்பேடு சந்தையில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் வெளியூர்களுக்கு சென்றது தான். அதனால் கோயம்பேடு சந்தையில் பணியாற்றிய ஊழியர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

ttn

மின்னல் வேகத்தில் பரவி வரும் இந்த கொடிய நோயான கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்கும் விதமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கடி, மாவட்ட அதிகாரிகளுடனும் கொரோனா தடுப்பு குழுவினருடனும் ஆலோசனை மேற்கொண்டு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதே போல இன்றும் முதல்வர் சென்னையில் அதிகப்படியான கொரோனா பாதிப்பு குறித்து மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். அந்த ஆலோசனையில் சென்னை கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கலந்து கொள்கின்றனர்.