மின்னல் வேகத்தில் செல்போனை பறித்து செல்லும் கும்பல் – மயிலாடுதுறையில் அட்டகாசம்!

மின்னல் வேகத்தில் செல்போனை பறித்து செல்லும் கும்பல் – மயிலாடுதுறையில் அட்டகாசம்!

செல்போன் இல்லாத மனிதனை காண்பதே அரிதாகிவிட்டது. சாலையில் பேசிக்கொண்டே நடப்பது, செல்போனை நோண்டிக்கொண்டே செல்வது சகஜமாகிவிட்டது. மயிலாடுதுறையில் இப்படி செல்போனை பார்த்தபடியே செல்வோரிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு செல்வது அதிகரித்து வந்தது. 

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் சாலையில் செல்வோர் கையிலிருந்து செல்போனை மின்னல் வேகத்தில் பறித்துச் செல்லும் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

Mayiladuthurai

செல்போன் இல்லாத மனிதனை காண்பதே அரிதாகிவிட்டது. சாலையில் பேசிக்கொண்டே நடப்பது, செல்போனை நோண்டிக்கொண்டே செல்வது சகஜமாகிவிட்டது. மயிலாடுதுறையில் இப்படி செல்போனை பார்த்தபடியே செல்வோரிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு செல்வது அதிகரித்து வந்தது. 
செல்போன் கொள்ளையர்களைப் படிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர். இந்த நிலையில், நேற்று இரவு மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் தலைமையில் போலீசார் வாகன தனிக்கையில் ஈடுபட்டுவந்தனர். அப்போது, பைக்கில் நான்குபேர் வந்துள்ளனர். அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களைப் பிடித்து விசாரித்தனர்.

Mobile snatching gang

அப்போது, அவர்கள் பெயர் ராம்குமார் (22), வசந்த் (19), கார்த்தி(21), விவேக் (22) என்பதும், இவர்கள் சாலையில் செல்வோரிடம் மொபைல் போனை திருடிவந்ததும் தெரியவந்தது. இவர்கள் அளித்த தகவல் அடிப்படையில் செல்போன் திருட்டில் ஈடுபட்டுவந்த மேலும் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள், இரவில் மட்டுமே செல்போன் திருட்டில் ஈடுபடுவார்களாம். அப்போதுதான் சாலையில் ஆள் நடமாட்டம் இருக்காது. திருடிவிட்டு வேகமாக வண்டியில் தப்பிவிடலாம். திருடிய செல்போன்களை விற்று நாள் முழுக்க போதையிலிருந்து வந்துள்ளார்கள். இவர்களிடமிருந்து விலை உயர்ந்த போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.