மின்சார செலவினத்தை குறைத்து, மிச்சமான பணத்தில் பள்ளி மற்றும் கல்லூரி தொடங்கி அசத்திய கோயில்…

 

மின்சார செலவினத்தை குறைத்து, மிச்சமான பணத்தில் பள்ளி மற்றும் கல்லூரி தொடங்கி அசத்திய கோயில்…

குஜராத்தில், சோலார் பேனல்களை பயன்படுத்தி மின்சார செலவினத்தை குறைத்த கோயில் நிர்வாகம், மாதந்தோறும் மிச்சமான பணத்தில் பள்ளி மற்றும் கல்லூரி தொடங்கி அசத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் உள்ள பிரபலமானது பத்ரிநாராயணன் கோயில். இந்த கோயிலுக்கு மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருவது வாடிக்கை. இந்த கோயிலுக்கான மின்சாரம் கட்டணம் அதிகமாக இருப்பதை பார்த்த  கோயில் நிர்வாகம் மின்சார செலவினத்தை குறைக்க முடிவு செய்தது. இதனையடுத்து மின்சார தேவைக்காக ரூ.25 லட்சம் செலவில் சோலார் பேனல்களை கோயிலின் மேல்தளத்தில் நிறுவியது.

சோலார் பேனல்கள்

மேலும், கோயிலின் அனைத்து பகுதிகளிலும் சோலார் பேனல்களால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை பயன்படுத்தியது. இதனால் கோயிலுக்கு நிர்வாகத்துக்கு மின்சார தொகைக்காக செலவிட்டு வந்த பெரிய தொகை மிச்சமானது. இதனால் கோயில் நிர்வாகத்தினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அதன்பிறகு கோயில் நிர்வாகத்தினர் செய்த காரியம்தான் அந்த பகுதி மக்களையும் சந்தோஷத்தில் மூழ்கடித்துள்ளது.

சோலார் பேனல்கள்

மின் தேவைக்காக சோலார் பேனல்களை பயன்படுத்த தொடங்கியதால் கோயில் நிர்வாகத்துக்கு மாதந்தோறும் சுமார் ரூ.1 லட்சத்துக்கு மேல் மிச்சமானது. மிச்சமான அந்த தொகையை அந்த பகுதியில் கல்வி  மேம்பாட்டு பணிகளில் கோயில் நிர்வாகம் செலவிட்டு  வருகிறது. இது குறித்து கோயில் அறங்காவலர் பிரவின் சந்திரா கூறுகையில், மின்சார செலவினம் அதிகமாக இருந்ததால், சூரியமின்சக்திக்கு மாறினோம். இதனால் மாதந்திர மின்சார செலவினம் ரூ.12 ஆயிரமாக குறைந்தது. முன்பு மின்சாரத்துக்காக ரூ.1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரை செலவிட்டு வந்தோம். தற்போது மிச்சமான தொகையை கொண்டு கோயில் நிர்வாகம் சமஸ்கிருத பள்ளி மற்றும் கல்லூரியை தொடங்கியது என தெரிவித்தார்.