மினி வேனில் ஆடுகளைத் திருடும் தம்பதி! திருச்சியில் பரபரப்பு!

 

மினி வேனில் ஆடுகளைத் திருடும் தம்பதி! திருச்சியில் பரபரப்பு!

தமிழகத்தில் பொருளாதார குற்றங்கள் சமீப காலங்களாக பெருகி வருகின்றன. டிசைன் டிசைனாக திருட்டுத் தொழிலில் இப்போது பெண்களும் ஈடுபட துவங்கியுள்ளனர். திருச்சியில் கூலி வேலை செய்து வருபவர் துரைராசு (56). இவர் வளர்த்து வந்த ஆடுகளும், மாடுகளும் நேற்று திடீரென மாயமானதைக் கண்டு தேடும் பணியில் ஈடுபட்டார்.

தமிழகத்தில் பொருளாதார குற்றங்கள் சமீப காலங்களாக பெருகி வருகின்றன. டிசைன் டிசைனாக திருட்டுத் தொழிலில் இப்போது பெண்களும் ஈடுபட துவங்கியுள்ளனர். திருச்சியில் கூலி வேலை செய்து வருபவர் துரைராசு (56). இவர் வளர்த்து வந்த ஆடுகளும், மாடுகளும் நேற்று திடீரென மாயமானதைக் கண்டு தேடும் பணியில் ஈடுபட்டார். அப்போது, மணப்பாறை சந்தையில் இரண்டு பேர், சந்தேகம் ஏற்படும் வகையில் ஆடுகளுடன் விற்பனைக்கு நிற்பதாக தகவல் கிடைத்தது. இதை அடுத்து, சந்தைக்குச் சென்று பார்த்த போது, அவை துரைராசுவின் ஆடுகள் தான் என்பது தெரிய வந்தது. பின்னர், அங்கிருந்து தப்ப முயன்ற திருடர்கள் இருவரையும் பிடித்து உதை கொடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

goat

மணப்பாறை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில் அவர்களது பெயர் சங்கர் (32), சங்கரின் மனைவி சகுந்தலா (38) என்பது தெரிய வந்தது. மேலும், அவர்கள் கிராமம் கிராமமாக மினி வேனில் சென்று கழிவுநீர் உறிஞ்சும் பணியினை மேற்கொள்பவர்கள் என்பதும் தெரிய வந்தது. கழிவுநீர் சுத்தம் செய்ய வருவது போல் நடித்து ஆடுகளைத் திருடியது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, மினி வேனை பறிமுதல் செய்த காவல் துறையினர் சங்கர், சகுந்தலா, அவர்களுக்கு உடந்தையாக இருந்த ராமச்சந்திரன் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.