‘மினியான்’ போல ஒற்றைக் கண்ணுடன் பிறந்த நாய்க்குட்டி.. அதிர்ஷ்டமாகக் கருதும் ஊர்மக்கள் !

 

‘மினியான்’ போல ஒற்றைக் கண்ணுடன் பிறந்த நாய்க்குட்டி.. அதிர்ஷ்டமாகக் கருதும் ஊர்மக்கள் !

வெளிநாட்டில் ஒருவர் வளர்த்த நாய்க்கு ஒற்றை கண்ணுடன் நாய்க்குட்டி பிறந்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

பொதுவாகச் செல்ல பிராணி என்றாலே எல்லாருக்கும் பிடிக்கும். குறிப்பாக அந்த பிராணிகள் பிறந்து சில நாட்களுக்குப் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். அதன் குட்டி கைகளும், கால்களும் செல்ல பிராணிகளைப் பிடிக்காதவர்கள் கூட அவைகளைக் கொஞ்சுவார்கள். இந்நிலையில், வெளிநாட்டில் ஒருவர் வளர்த்த நாய்க்கு ஒற்றை கண்ணுடன் நாய்க்குட்டி பிறந்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

ttn

தாய்லாந்தில் சச்சோயெங்சாவோ மாகாணத்தில் வசித்து வரும் சோம்ஜாய் பும்மான் என்னும் ஒருவர் நாய் ஒன்று வளர்த்து வருகிறார். அந்த நாய்க்குக் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 2 குட்டிகள் பிறந்துள்ளன. அதில் ஒன்று ஒற்றைக் கண்ணுடன் பிறந்த அந்த நாயைப் பார்த்து ஆச்சரியமடைந்த உரிமையாளர் அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். ஒற்றை கண்ணுடன் பிறந்ததால் அதற்கு ‘சைக்ளோப்ஸ்’ என்று பெயரிட்டு செல்லமாக வளர்த்து வருகிறாராம். அந்த நாய் இப்போது அப்பகுதியில் இருக்கும் எல்லாருக்கும் செல்ல பிராணியாக மாறியுள்ளது.

ttn

அப்பகுதி மக்கள் எல்லாரும் அதனை அதிர்ஷ்டமாகக் கருதுவதால் அவர்களின் லாட்டரி சீட்டுக்கு சைக்ளோப்ஸின் பிறந்த தேதியையே பயன்படுத்தி வருகின்றார்களாம். அந்த நாய்க்குட்டி இப்போது சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த நாய் கார்ட்டூன்களில் வரும் மினியான் போல இருப்பது குறிப்பிடத்தக்கது.