மிதுன ராசி குருபெயர்ச்சி பலன்கள்(2018-2019)

 

மிதுன ராசி குருபெயர்ச்சி பலன்கள்(2018-2019)

2018-2019 குருபெயர்ச்சி மிதுன ராசி நேயர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்

மிதுனம்: மிதுன ராசிக்கு அதிபதியாக புதன் விளங்குவதால் நீங்கள் மிகவும் நேர்மையுடனும், சாமர்த்திய சாலியாகவும் விளங்குவீர்கள். உங்கள் ராசிக்கு 7 மற்றும் 10 க்கு  அதிபதியான குரு பகவான் இதுவரை உங்கள் ராசிக்கு 5 ஆம் இடத்தில் இருந்து பல்வேறு விதமான நல்ல பலன்களை செய்து வந்தார்.

குரு பகவான் வருகின்ற அக்டோபர் மாதம்  4 ஆம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 6 ஆம் இடமாகிய விருச்சிகத்தில் சஞ்சரிக்க உள்ளதால் வீண் வம்பு வழக்குகளை சந்திக்கும் நிலை,பொருளாதார நெருக்கடி,ஆரோக்கிய பாதிப்புகள்,சுறுசுறுப்பின்மை,குடும்பத்தில் ஒற்றுமை குறைவு,வேலை பளு அதிகரிப்பு,அலைச்சல்,மன உளைச்சல் போன்ற அசுப பலன்கள் அதிகமாக நடைபெறுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம்.

குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து உங்களது ராசிக்கு 10 ஆம் இடமான மீன ராசியை பார்ப்பதால் தொழிலில் மேன்மை உண்டாகும். உத்தியோக உயர்வு ஏற்படும். தொழில் மாற்றங்கள் உண்டாக வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.வெளிநாடு செல்பவர்கள் எதிலும் கவனத்துடன் நடந்து கொள்வது நன்மை பயக்கும். பணி இட மாற்றம் கிடைக்கும்.

குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து உங்களது ராசிக்கு  12 ஆம் இடமாகிய ரிஷப ராசியை பார்ப்பதால் குழந்தை பாக்கியம் உண்டாகும். வீண் விரயங்களை ஏற்பட வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது. எதிலும் நிதானத்துடனும் ,தைரியத்துடனும் இருப்பது உத்தமம்.

குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து உங்களது ராசிக்கு 2 ஆம் இடமான கடக ராசியை பார்ப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சுப விரயங்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்.

 

mithunam maan

மாணவர்கள்: மிதுன ராசி மாணவர்கள் கல்வியில் மேன்மை அடைவார்கள்.மிகுந்த கவனத்துடனும்,தன்னம்பிக்கையுடனும் எல்லா காரியங்களிலும் செயல்படுவது உத்தமம். புதிய நண்பர்கள் இடத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

mithunam pengal

பெண்கள் : மிதுன ராசி பெண்கள் உடல் நலத்தில் கவனம் தேவை. அண்டை அயலார் இடத்தில் விட்டு கொடுத்து செல்வது நல்லது. புதிதாக திருமணம்  ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.புதிய தொழில் செய்வதற்கு அரசாங்க உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கணவன் மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது உத்தமம் .

mithunam kalingar

கலைஞர்கள் : மிதுன ராசி கலைத்துறையினர் எடுக்கின்ற முயற்சியில் தடை,தாமதங்கள்,உண்டாகும். நடிகர்கள்,எழுத்தாளர்கள்,இயக்குனர்கள் போன்ற அனைத்து கலைத்துறையினரும்  சக கலைஞர்களிடத்தில் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உடல் உழைப்பிற்கு  தகுந்த ஊதியம் கிடைப்பதில் சிக்கல் உண்டாகலாம்.

mithunam arasiy

அரசியல்வாதிகள்:  மிதுன ராசி அரசியல்வாதிகள் மிகவும் சுமாரானகாலம் இதுவாகும். கட்சியின் அடிமட்ட தொண்டனை அனுசரித்து செல்வது நல்லது. கூட்டனி கட்சிகளை முடிவு செய்வதில் மிகுந்த கவனம் தேவை.

mithunam vivasajy

விவசாயிகள் : மிதுன ராசி விவசாயிகளுக்கு இது ஒரு சாதாரணமான ஆண்டாகும். விவசாயம் சார்ந்த தொழிலில் அதிக முதலிடுகளை தவிர்ப்பது நன்மை உண்டாக்கும். விவசாயத்திற்கு தேவையான நீர்பாசன வசதிகள் கிடைக்கும். விவசாய கடன்கள் ரத்து செய்வதில் தாமதம் ஆகும்.

mithunam parikaa

 

பரிகாரம்: மிதுன ராசியில் பிறந்தவர்களில் யாருக்கெல்லாம் ராகு திசை நடைபெறுகிறதோ அவர்கள் ஆந்திர மாநிலம் திருகாளகஸ்தி சென்று வாழிபாடு செய்வதும், யாருக்கெல்லாம் குரு திசை நடைபெறுகிறதோ அவர்கள் சுவாமிமலை சென்று சுவாமியை தரிசனம் செய்வதும்,யாருக்கெல்லாம் சனி திசை நடைபெறுகிறதோ அவர்கள் திருக்கொள்ளிகாடு சென்று சுவாமியை வழிபாடு செய்துவர உங்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெறலாம்.