மிதப்பில் எடப்பாடி… பா.ஜ.க.,வை கைக்குள் போட்டு ரவுசு காட்டும் பாமக ராமதாஸ்..!

 

மிதப்பில் எடப்பாடி… பா.ஜ.க.,வை கைக்குள் போட்டு ரவுசு காட்டும் பாமக ராமதாஸ்..!

நாம் பாஜகவுடன் நெருக்கமாக இருப்பதால் அதிமுக தலைவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று டாக்டர் ராமதாஸ் தெம்புடன் இருப்பதாக அவரின் அடிப்பொடிகள் கூறுகிறார்கள்.

அதிமுக தரப்பு உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கிறது. மோடி- சீன அதிபர் ஆகிய இரு தலைவர்களை நேரில் பார்த்த சந்தோஷம்தான் அது. இப்போது அவர்களின் கவனம் எல்லாம் இடைத்தேர்தல் பக்கம் மாறி இருக்கிறது. எப்படியாவது இடைத்தேர்தலில் வெற்றி பெற்றே  ஆக வேண்டும் என்று தீவிரமாக களம் இறங்கி இருக்கிறார்கள். அத்துடன் இரண்டு தலைவர்களின் சந்திப்பையும் தேர்தல் களத்தில் பயன்படுத்த திட்டமிட்டு இருக்கிறார்களாம்.  அது இடைத்தேர்தலில் கொஞ்சமும் பயன்படாது என்பதே உள்ளூர் அதிமுக தொண்டர்களின் கருத்து. 

edappadi

’வாக்காளர்கள் எல்லாம் ரொம்ப தெளிவாக இருக்காங்க… அவங்க நினைப்பதை நாம பூர்த்தி செய்யாமல் வெற்றி என்பது கனவில் கூட வரக்கூடாது’ என்று உள்ளூர் நிர்வாகிகள்  அமைச்சர்களிடம் எடுத்துக் கூறி இருக்கிறார்கள். ’அதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம். உனக்கு வேண்டியதை கேட்டுட்டு… ஓட்டு அதிகமாக வாங்கி காண்பிங்க.. அது போதும்’ என்று உதாசீனப்படுத்தி அனுப்பி இருக்கிறார்கள். இதனால் சில பகுதி நிர்வாகிகள்  தேர்தல் பணியில் சுணக்கம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.  அடுத்து கூட்டணியில் இருந்தே டாக்டர் ராமதாஸ் குழி பறிப்பதாகவும் ஒரு தகவல். 

’கூட்டணியில் இருந்து கொண்டே  அனைத்து பலன்களையும் பல ஆண்டுகளாக அனுபவித்துவிட்டு, இப்போது எங்களுக்கு எதிராக கை தூக்குகிறாரா.? அவரின் பழைய வழக்குகளை எல்லாம் தூசி தட்டி வையுங்கள்’ என்று மேலிடத்தில் இருந்து  உத்தரவு போயிருக்கிறது. தேர்தல் முடிந்த உடனே ராமதாஸுக்கு அதிமுக தரப்பு பெரிய அளவில் செக் வைக்க முடிவு செய்து இருக்கிறதாம்.  ஆனால், ‘நாம் பாஜகவுடன் நெருக்கமாக இருப்பதால் அதிமுக தலைவர்களால் ஒன்றும் செய்ய முடியாது  என்று டாக்டர் ராமதாஸ் தெம்புடன் இருப்பதாக அவரின் அடிப்பொடிகள் கூறுகிறார்கள்.