மிசாவுக்காக ஸ்டாலின் பித்தலாட்டம்… ஆளுநருக்கு இனிசியல் கொடுத்த கருணாநிதி..!

 

மிசாவுக்காக ஸ்டாலின் பித்தலாட்டம்… ஆளுநருக்கு இனிசியல் கொடுத்த கருணாநிதி..!

மிசாவின் கீழ் கைது செய்யவேண்டியவர்களின் பட்டியல் கவர்னரின் ஆலோசகர்கள் கைகளில் இருந்தது. அதில் ஸ்டாலின் பெயர் இருந்ததேயில்லை.

காங்கிரஸ் கட்சியால் இந்தத் தலைமுறைக்கு உண்மைகள் மறக்கடிக்கப்பட்டுள்ளது கண் கூடு. இந்திரா காலத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டபிறகு  அப்போதைய காங்கிரசின் நவசக்தி நாளிதழில் அவசர நிலையையும் எதிர்கட்சித் தலைவர்கள் கைதையும் பற்றி எதிர்த்து செய்தியும் கட்டுரைகளும் வந்தது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி காமராஜரின் வழிகாட்டுதலின்படி அவசரநிலையை எதிர்த்துத் தீர்மானம் போட்டது கூட வெளிவந்தது துக்ளக், இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும இதழ்கள் முன் தணிக்கையால் திண்டாடின அவசரநிலையை துஷ்பிரயோகம் செய்து திமுகவுக்கு வேண்டாத பத்திரிக்கைகள் சென்சார் செய்யப்பட்ட பின்பே வெளிவந்தன.stalin

அப்போது டெல்லியின் உத்தரவுப்படி மிசாவில் கைது செய்யப்பட்டது ஆர்.எஸ்.எஸ் ஜனசங்கம் மற்றும் ரயில்வே தொழிற்சங்கத்தினர் தொண்டர்கள் மட்டுமே. ஆனால் முரசொலி என்ன செய்தது? ஏன் அதற்கு மட்டும் சென்சார் இல்லை? காரணம், ’தீயமுக’ காங்கிரஸ ஏஜெண்டான கவர்னர் கே.கே.ஷாவைக் கையில் போட்டுகொண்டு டெல்லிக்கு அவ்வப்போது போதுமான பெட்டிகளை அனுப்பியதுதான். 

காமராஜரை எதிர்க்க உள்ளூர் இந்திரா காங்கிரஸ் ஆட்களுடன் கருணாநிதி குலவிக் கொண்டிருந்தார். கவர்னர் கே.கே.ஷா தன்னை  கருணாநிதி, கே.ஷா என்பதன் சுருக்கமே கே.கே.ஷா எனக் கூறிக் கொண்டிருந்தார். அவசர நிலையை திமுக எதிர்த்துபோராடியது என்பது எல்லாம் வெளிவேஷம். அதனை சுயநலத்துக்குப் பயன்படுத்தியது என்பதுதான் உண்மை. சட்டமன்றத்தின் ஆயுட்காலம் சில வாரங்கள் மட்டுமே பாக்கி இருந்தபோது தேர்தல் அறிவிப்பு வெளியிடவேண்டிய காலம் வந்துவிட்டதால், தனது கட்சியை வளர்க்க சுயநலத்துக்காக இந்திரா – திமுக ஆட்சியைக் கலைத்தார்.

stalin

ஆக மொத்தம் இந்திரா – கருணா இருவருமே  சுயநல அரசியலை கையாண்டார்கள். மிசாவின் கீழ் கைது செய்யவேண்டியவர்களின் பட்டியல் கவர்னரின் ஆலோசகர்கள் கைகளில் இருந்தது. அதில் ஸ்டாலின் பெயர் இருந்ததேயில்லை. மிசா விலக்கப்பட்டபின் போலி தியாகி பட்டத்தை பலர் சூட்டிக்கொண்டனர் என்பதே உண்மை.
-கருப்பன்