‘மிக்’ ரக போர் விமானம் தரையில் விழுந்து விபத்து : உயிர் தப்பிய பைலட்கள் !

 

‘மிக்’ ரக போர் விமானம் தரையில் விழுந்து விபத்து : உயிர் தப்பிய பைலட்கள் !

கோவா மாநில கடற்படையின் மிக்-29கே ரக விமானத்தில் இரண்டு விமானிகள் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளனர்.

கோவா மாநில கடற்படையின் மிக்-29கே ரக விமானத்தில் இரண்டு விமானிகள் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளனர். விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம், சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டை இழந்துள்ளது. விமானத்தைத் தரையில் இறக்க பைலட்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால், விமானம் தரையில் விழுந்து முழுவதுமாக சேதமடைந்துள்ளது.

Flight

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பைலட்களுக்கு எந்த வித உயிர்ச்சேதமும் ஏற்படாமல் காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்து விமானத்தின் என்ஜின் பகுதியில் பறவை ஒன்று வந்து மோதியதால் விமானம் கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது.