மிக்சி, சைக்கிள் லேப்டாப் நம்ம ஸ்டைல். இலவச கார் கர்நாடகா ஸ்டைல்

மிக்சி, சைக்கிள் லேப்டாப் நம்ம ஸ்டைல். இலவச கார் கர்நாடகா ஸ்டைல்

ஐராவதா என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின்கீழ் ரூ.225 கோடியில் 4500 பேருக்கு கார்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, 200 இளைஞர்களுக்கு கார்கள் வழங்கும் நிகழ்ச்சி முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் நடைபெற்றது. மொத்த பயனாளிகளில் 10% பெண்களுக்கு என ஒதுக்கப்படுவதாக சமூக நலத்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும்வகையில், அம்மாநில அரசு எஸ்.சி. எஸ்.டி. பிரிவினருக்கு உபேர் நிறுவனத்துடன் இணைந்து இலவச கார்களை வழங்குகிறது. தலா 5 லட்சம் கொண்ட ஒவ்வொரு காருக்கான 100% தொகையையும் அரசு செலுத்த, ஓட்டுநர்களுக்கான பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு உறுதிபடுத்துதலை உபேர் நிறுவனம் பார்த்துக்கொள்ளும்.

Karnataka Free Car

ஐராவதா என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின்கீழ் ரூ.225 கோடியில் 4500 பேருக்கு கார்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, 200 இளைஞர்களுக்கு கார்கள் வழங்கும் நிகழ்ச்சி முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் நடைபெற்றது. மொத்த பயனாளிகளில் 10% பெண்களுக்கு என ஒதுக்கப்படுவதாக சமூக நலத்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக கடந்த மார்ச் மாதம் 70 பேர்களுக்கான கார்கள் வழங்கப்பட்டதையடுத்து, இப்போது 200 கார்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் ஊழல் நடந்திருக்கிறது என எதிர்க்கட்சியான பாஜக அறிவித்திருக்கும்நிலையில், ஊசலாட்டத்தில் இருக்கும் அரசு கவிழ்வதற்கு முன்பாகவே மொத்தமுள்ள 4500 கார்களையும் டெலிவரி எடுக்க கர்நாடக அரசு முனைந்துள்ளது.