மிக்க நன்றி பியர் கிரில்ஸ்..லவ் யூ : Man vs Wild ஷோ குறித்து ரஜினிகாந்த் ட்வீட் !

 

மிக்க நன்றி பியர் கிரில்ஸ்..லவ் யூ : Man vs Wild ஷோ குறித்து ரஜினிகாந்த் ட்வீட் !

 MAN VS WILD நிகழ்ச்சி படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் மைசூர் அருகேயுள்ள பந்திப்பூர் பந்திபுரா புலிகள் காப்பகத்தில் நடைபெற்றது. 

டிஸ்கவரி சேனல் என்ற உடனே எல்லாருக்கும் நினைவு வருவது  MAN VS WILD நிகழ்ச்சி தான். சமீபத்தில் அந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டது இந்தியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து நேற்று ரஜினிகாந்த் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதற்கான படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் மைசூர் அருகேயுள்ள பந்திப்பூர் பந்திபுரா புலிகள் காப்பகத்தில் நடைபெற்றது. 

ttn

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினிகாந்த்துக்குக் கணுக்கால் மற்றும் தோளில் சில காயங்கள் ஏற்பட்டுள்ளதாக நேற்று மாலை தகவல்கள் வெளியாகின. ஆனால் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், தன் காலில் முள் மட்டுமே குத்தியதாகவும், காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

இந்நிலையில் Man vs Wild ஷோ குறித்து ரஜினிகாந்த் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” மிக்க நன்றி பியர் கிரில்ஸ். இது ஒரு மறக்க முடியாத அனுபவம், லவ் யூ. நன்றி டிஸ்கவரி சேனல்” என்று பதிவிட்டுள்ளார்.