மாஸ் காட்டும் ’96’ திரைப்படம் : டிரெண்டாகும் ஜானு சுடிதார்!

 

மாஸ் காட்டும் ’96’ திரைப்படம் : டிரெண்டாகும் ஜானு சுடிதார்!

’96’ படத்தில் த்ரிஷா அணிந்திருந்த ஜானு சுடிதார் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

சென்னை: ‘96′ படத்தில் த்ரிஷா அணிந்திருந்த ஜானு சுடிதார் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

நவீன உலகில் இளைஞர்கள் மத்தியில் திரைப்படங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அப்படி ஒரு திரைப்படம் வந்தால் அதில் இருக்கும் கருத்துக்களும், சிந்தனைகளும் எப்படிப் பேசப்படுகிறதோ, அளவுக்கு ஹீரோ, ஹீரோயின் அணிந்திருக்கும் ஸ்டைல், ஹேர் ஸ்டைல் போன்றவை இளைஞர்கள் மத்தியில் டிரெண்டாகி வருவது  வழக்கம். அந்த வகையில் தற்போது ’96’ படத்தில் த்ரிஷா அணிந்திருந்த ஜானு சுடிதார் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த ’96’ திரைப்படம் பள்ளிப்பருவ காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்த திரைப்படம் இளைஞர்களை மட்டுமல்லாது அனைத்து வயதினரையும் கவர்ந்தது. இப்படத்தில் விஜய் சேதுபதி,  த்ரிஷா ஆகியோர் ஜானு மற்றும் ராமசந்திரன் கதாபாத்திரத்தில் வலம்  வந்து அசத்தினர்.

 

இப்படம் முழுக்க ஒரே ஒரு மஞ்சள் நிற சுடிதாரும் அதற்கேற்ப துப்பட்டாவையும் மடித்துப் போட்டிருப்பார் த்ரிஷா.  இது அனைத்துப் பெண்களையும் கவர  தற்போது இது  தீபாவளி கலெக்‌ஷனாக விற்பனைக்கு வந்துள்ளன. இது குறித்து புகைப்படத்தை த்ரிஷா தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.