மாஸ் காட்டும் விஸ்வாசம்: ‘உயிரினும் மேலான ரசிகர்களே’ இந்த வெற்றி உங்களுடையது: யார் சொன்னது தெரியுமா?

 

மாஸ் காட்டும் விஸ்வாசம்: ‘உயிரினும் மேலான ரசிகர்களே’ இந்த வெற்றி உங்களுடையது: யார் சொன்னது தெரியுமா?

விஸ்வாசம்  திரைப்படத்தை  வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி என்று கேஜேஆர் ஸ்டுடியோஸ் தெரிவித்துள்ளது.

சென்னை: விஸ்வாசம்  திரைப்படத்தை  வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி என்று கேஜேஆர் ஸ்டுடியோஸ் தெரிவித்துள்ளது.

இயக்குநர் சிவா -அஜித் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.  

viswsam

விஸ்வாசம் படம் வெளியான 8 நாட்களிலேயே தமிழகத்தில் 125 கோடி வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அஜித் ரசிகர்கள் ரஜினி ரசிகர்கள் இடையே சமூகவலைதளத்தில்  மோதல் கிளம்பின. இருப்பினும் அஜித் படங்களிலேயே அதிக வசூல் செய்த படமென்றால் அது விஸ்வாசம் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது என்று சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் படத்தை வெளியிட்ட கேஜேஆர் ஸ்டுடியோஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘உயிரினும் மேலான ரசிகர்களே, விஸ்வாசம் படத்தின் வெற்றியானது உங்களுடையது. மாபெரும் வெற்றிப் படமாக்கிய உங்களுக்கு நன்றி’ என்று பதிவிட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.