மாஸ் காட்டும் ரஜினி- நயன்தாரா! வெளியானது தர்பார் புரோமொ!

மாஸ் காட்டும் ரஜினி- நயன்தாரா! வெளியானது தர்பார் புரோமொ!

இயக்குநர்  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம்  ரசிகர்களுக்குப் பொங்கல்  விருந்தாக ஜனவரி 9 ஆம் தேதி தமிழகத்தில் வெளியாகவுள்ளது. இதில் சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

darbar

முன்னதாக தர்பார் திரைப்படத்தின்  பிரீமியர்  காட்சி அமெரிக்காவில் ஜனவரி 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது. நேற்று ‘தர்பார்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. 

இந்நிலையில் இன்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தர்பார் பட ஷார்ட் புரோமொ வீடியோவை வெளியிட்டுள்ளார்.  இந்த புரோமொ முழுவதும் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாராவை ஆகிய இருவர் மட்டுமே உள்ளனர். பின்னணி இசையுடன் காரில் இருந்து அட்டகாசமாய் இறங்கி வரும் ரஜினிகாந்த், நயன்தாராவிடம் எதையோ கூறவந்து தடுமாறுகிறார்.  அதற்கு நயன்தாரா சாரி எனக்கு உருது தெரியாது என்று கூற மீண்டும் திக்கி திணறுகிறார் ரஜினி. அப்போது அவர்கள் இருவருக்கு முன் ஒரு நர்ஸ் வருகிறார். அவரிடம்  இவரை இஎன்டிக்கிட்ட கூட்டிக்கிட்டு போங்க என்று கூறி அங்கிருந்து நகர்கிறார் நயன்தாரா.  முழுக்க முழுக்க காதல் காட்சிகளுடன் வெளியான இந்த புரொமோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.