மாஸ் காட்டும் சூப்பர் ஸ்டார்: பேட்ட ‘உல்லால்லா’ பாடலின் சாதனை!

 

மாஸ் காட்டும் சூப்பர் ஸ்டார்: பேட்ட ‘உல்லால்லா’ பாடலின் சாதனை!

பேட்ட படத்தில் இடம்பெற்றுள்ள ‘உல்லால்லா’ பாடல் வீடியோ யூடியூப்பில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

சென்னை: பேட்ட படத்தில் இடம்பெற்றுள்ள ‘உல்லால்லா’ பாடல் வீடியோ யூடியூப்பில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

சன் பிக்சர் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் பேட்ட திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. அதில் நடிகர் விஜய் சேதுபதி, சிம்ரன், சசிகுமார், த்ரிஷா, நவாசுதீன் சித்திக்  உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். 80களில்  இருந்த ரஜினியை மீண்டும் திரையில் கண்ட அனுபவம், உண்மையிலேயே ரஜினி ரசிகர்களுக்குப் பொங்கல் விருந்தாக அமைந்துள்ளது. சர்வதேச அளவிலும் பேட்ட வசூல் சாதனை படைத்துள்ளது.

இப்படத்தின் மூலம் ரஜினியுடன் முதன்முதலாக இணைந்த அனிருத்,  ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குக் கொஞ்சமும் குறையாமல் மாஸ், கிளாஸ், ரொமான்ஸ் என எல்லா வகையான பாடல்களையும் கொடுத்திருந்தார்.

 

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ’உல்லால்லா’ பாடலை சோனி மியூசிக் நிறுவனம் தனது  யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இப்பாடல் வெளியான சில மணிநேரங்களிலேயே 10லட்சம் பார்வையாளர்களை கடந்தது   குறிப்பிடத்தக்கது.