மாஸ்டர் படம் வெளியாவதில் சிக்கல்! தாமதமாகும் ரிலீஸ்!!

 

மாஸ்டர் படம் வெளியாவதில் சிக்கல்! தாமதமாகும் ரிலீஸ்!!

பிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் மாஸ்டர்  படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில்  உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.

பிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் மாஸ்டர்  படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில்  உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன்  உள்ளிட்ட பலர்  நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, கர்நாடகா, சென்னை, நெய்வேலியில் நடைபெற்றது. இசை வெளியீட்டு விழா இன்னும் சில தினங்களில் சென்னையிலுள்ள பிரபல ஹோட்டலில் நடைபெறவுள்ளது. 

Master

இந்நிலையில் மாஸ்டர் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். நேற்றுடன் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கியுள்ள. இந்நிலையில் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாகவும், படம் மே மாதம் வெளியாகவுள்ளாதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. இது விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.