மாஸ்டர் படப்பிடிப்பு நிறைவு… லோகேஷ் கனகராஜின் நெகிழ்ச்சிப் பதிவு!

 

மாஸ்டர் படப்பிடிப்பு நிறைவு… லோகேஷ் கனகராஜின் நெகிழ்ச்சிப் பதிவு!

மாஸ்டர் படம் தொடங்கப்பட்டது முதலே ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பு அதிகமாகியது. படத்தைப் பற்றிய  சின்ன சின்னச்  செய்திகளையும் கூட இந்திய அளவில் ட்ரெண்டாக்கி கொண்டாடினார்கள் விஜய் ரசிகர்கள். விஜய் சேதுபதியும் படத்தில் இணைந்துவிட்டார் என்றதும் சமூக வலைத்தளமே திருவிழா கொண்டாட்டம் போட்டது. பின்னர் குட்டி ஸ்டோரி பாடல், விஜய் செல்பி, விஜய் சேதுபதி முத்தம் என அவ்வப்போது ரசிகர்களுக்கு விருந்து படைத்து வந்தார்கள் மாஸ்டர் படக்குழு. பல  சர்ச்சைகளையும் இந்த படம் சந்திக்க நேர்ந்தது அனைவரும் அறிந்ததே!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு 129 நாட்கள் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. 

master-crew-selfie-09

மாஸ்டர் படம் தொடங்கப்பட்டது முதலே ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பு அதிகமாகியது. படத்தைப் பற்றிய  சின்ன சின்னச்  செய்திகளையும் கூட இந்திய அளவில் ட்ரெண்டாக்கி கொண்டாடினார்கள் விஜய் ரசிகர்கள். விஜய் சேதுபதியும் படத்தில் இணைந்துவிட்டார் என்றதும் சமூக வலைத்தளமே திருவிழா கொண்டாட்டம் போட்டது. பின்னர் குட்டி ஸ்டோரி பாடல், விஜய் செல்பி, விஜய் சேதுபதி முத்தம் என அவ்வப்போது ரசிகர்களுக்கு விருந்து படைத்து வந்தார்கள் மாஸ்டர் படக்குழு. பல  சர்ச்சைகளையும் இந்த படம் சந்திக்க நேர்ந்தது அனைவரும் அறிந்ததே!

vj-master

படத்தின் இயக்குனர் லோகேஷ் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ஓய்வில்லாமல் தொடர்ச்சியாக 129 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. இந்த பயணம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒரு பயணம், என் மீதும் என் குழுவின் மீதும் நம்பிக்கை வைத்த விஜய் அண்ணனுக்கு நன்றி. இமயமலை அளவுக்கு கடினமான இந்த வேலையை என்னுடைய டைரக்ஷன் டீம் இல்லாமல் செய்திருக்க முடியாது. உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

மாஸ்டர் படத்தில் நடித்த ஷாந்தனுவும் ஷூட்டிங் நிறைவடைந்தது பற்றி பதிவிட்டிருந்தார். இந்த பதிவுகள் விஜய் ரசிகர்களுக்கு மற்றுமொரு அப்டேட்டாக அமைந்ததால் இதையும் கொண்டாடி வருகின்றனர்.