மாஸ்டர் படபிடிப்பு தளத்தில் திடீரென ஐ.டி ரெய்டு.. நடிகர் விஜய்யிடம் விசாரணை !

 

மாஸ்டர் படபிடிப்பு தளத்தில் திடீரென ஐ.டி ரெய்டு.. நடிகர் விஜய்யிடம் விசாரணை !

பிகில் படம் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் நிறுவனம் வீடு, சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட 20 இடங்களில் வரி ஏய்ப்பு தொடர்பான புகார் வந்ததால் வருமான வரித்துறையினர் திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படம் இதுவரை 300 கோடி ரூபாய் வசூல் செய்ததாகத் தகவல் வெளியாகியது. ஆனால், அதனைத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உறுதி செய்யவில்லை.

ttn

இந்நிலையில் பிகில் படம் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் நிறுவனம் வீடு, சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட 20 இடங்களில் வரி ஏய்ப்பு தொடர்பான புகார் வந்ததால் வருமான வரித்துறையினர் திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் இன்று காலை முதல்  பைனான்சியர் அன்புச்செழியனின் வீட்டிலும் ஐ.டி ரெய்டு நடத்தப் பட்டு வருகிறது.  

ttn

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலி என்.எல்.சியில் நடைபெற்று வருகிறது. அங்கும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ttn

ஏ.ஜி.எஸ் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்ட போது பிகில் படத்துக்காக வழங்கப்பட்ட சம்பளம் தொடர்பாக முக்கிய ஆவணங்கள் சிக்கியதால் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற அதிகாரிகள் நடிகர் விஜய்யிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் ரெய்டு நடந்து வருவதால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.