‘மாஸ்டர்’ ட்ராக் லிஸ்ட் லீக்… மொத்தம் எத்தனை பாடல்கள் தெரியுமா?

 

‘மாஸ்டர்’ ட்ராக் லிஸ்ட் லீக்… மொத்தம் எத்தனை பாடல்கள் தெரியுமா?

தற்போது கர்நாடகாவில் உள்ள சிறைச்சாலையில் நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்க இருக்கின்றன. 

பிகில் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  நடிகர் விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். விஜயின் 64-வது படமான இந்தப்  படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு டெல்லி மற்றும் சென்னையில் நடைபெற்ற நிலையில் தற்போது கர்நாடகாவில் உள்ள சிறைச்சாலையில் நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்க இருக்கின்றன. 

 

வரும் ஏப்ரல் மாதத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மாஸ்டர் படம்  திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  மாஸ்டரின் போஸ்டர்கள் நல்ல வரவேற்பை பி[பெற்றுள்ள நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ttn

இந்நிலையில் கூகுள் தேடுதலில் தளபதி64 சாங்ஸ் என டைப் செய்தால் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் குறித்த தகவல்கள் உள்ளது. அதில் டைட்டில் டிராக் மற்றும் ‘உடம்புல ஃபுல்லா திமிரு’ என்ற இரண்டு பாடல்களையும்   அனிருத் பாடியுள்ளார்.  ‘வா வா என் எதிரில்’ பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், ‘இங்க நான்’ பாடலை ஸ்ரேயா கோஷலுடன் இணைந்து சித் ஸ்ரீராம் பாடி இருப்பதாக அதில் உள்ளது. தளபதி கோட்டையில் பாடலை அந்தோணி தாஸ் பாடியுள்ள நிலையில்  நான் வந்தா பட்டாசு வெடிக்கும் பாடலை நாகேஷ் அஸிஸ்  பாடியுள்ளார். மொத்தம் அந்த லிஸ்டில் 10 பாடல்கள் உள்ளன.